AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகங்கையில் மாணவன் கொலை வழக்கில் திருப்பம் – போக்சோ வழக்காக மாற்றம் – அதிர்ச்சி தகவல்

சிவகங்கை அருகே 10 ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 2 இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கையில் மாணவன் கொலை வழக்கில் திருப்பம் – போக்சோ வழக்காக மாற்றம் – அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Jun 2026 21:56 PM IST

சிவகங்கை, ஜூன் 7 : சிவகங்கை அருகே 10 ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே கீழச்சேவல்பட்டி என்ற கிராமத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் 2 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் சிறுவனை வன்கொடுமை செய்ததாக அளித்த தகவல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சிவகங்கையில் மாணவன் கொலை வழக்கில் திருப்பம்

சிவகங்கை மாவட்டம் கரையூரை சேர்ந்தவர் அஶ்வின். 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் 4, 2026 அன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி முடிந்த பிறகு தனது நண்பர்களுடன் அஸ்வின் வெளியே சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பெரம்பூரில் சூட்கேஸில் சடலம் – இறந்தவரின் அடையாளம் தெரிந்தது – மனைவி கைது

அதில் சில மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அஸ்வின் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அஸ்வினின் கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை கீழக்காவானூர் கண்மாய் பகுதியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரவு முழுவதும் தங்கள் மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் அருகில் இருந்த நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். இந்த நிலையில் தான் ஜூன் 5, 2026 அன்றுகண்மாய் பகுதியில் அஸ்வினின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டவர்கள் அஸ்வினை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு தற்போது போக்சோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : நீதிமன்ற வளாகத்திலேயே கொலையா? கோவையில் பிணமாகக் கிடந்த வாலிபர் வழக்கில் அதிரடி திருப்பம்!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் ஜூன் 9 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us