மினி பஸ்ஸை முந்த முயன்ற பள்ளி வேன்… படியில் தொங்கியபடி பயணித்த மாணவன் மரணம்… சிவகங்கையில் பரபரப்பு
Bus Accident : சிவகங்கை அருகே மினி பேருந்து ஒன்றை பள்ளி பேருந்து முந்த முயன்றபோது மினி பேருந்தின் பக்கவாட்டில் பள்ளி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மினி பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
சிவகங்கை (Sivaganga) மாவட்டத்தில் நவம்பர் 12, 2025 இன்று காலை நடைபெற்ற துயரமான சாலை விபத்தில், மினி பேருந்தின் படியில் பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை அருகே மினி பேருந்தை முந்தி செல்ல முயன்ற ஒரு தனியார் பள்ளி வேன் பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இந்த நிலையில், பேருந்தின் படியில் தொங்கிய படி பயணித்த மாணவர் சந்தோஷ் கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பரபரப்பான காலை நேரத்தில் பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் மாணவர்கள் சாலையில் தொங்கிய படி பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மினி பேருந்து பாலத்தை கடந்து, ஆதம்பாள்ளிவாசல் அருகே வந்த போது, அருகில் இருந்த தனியார் பள்ளிவேன் பேருந்தை முந்தி செல்ல முயன்றிருக்கிறது. ஓட்டுனரின் கவனக்குறைவால் இரு பேருந்துகளும் பக்கவாட்டில் மோதி கொண்டது.
இதையும் படிக்க : பெண்ணின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே செல்ல முயன்ற நபர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!




இந்த நிலையில் இந்த நிலையில் பேருந்தில் பயணித்த சந்தோஷ் என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கீழே விழுந்து இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்திருக்கிறது. இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருக்கிறார். அதே நேரத்தில், பேருந்தில் அதிக நெரிசல் காரணமாக படியில் தொங்கியபடி பயணம் செய்த மற்றொரு மாணவரும் கீழே விழுந்து இடது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் தொடர்பாக, பள்ளி பேருந்து ஓட்டுனரின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உள்ளூர் மக்கள் திரண்டதால், ஒரு கட்டத்தில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க : கோயிலுக்குள் வைத்து இரண்டு முதியவர்கள் வெட்டிக்கொலை.. உண்டியலை திருட வந்தவர்கள் செய்த கொடூரம்!
மாணவர் சந்தோஷின் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பள்ளி நேரங்களில் அப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற நேரங்களில் காவல்துறையினர் வாகன ஒழுங்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.