Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. தீக்குளித்துவிடுவேன் என பெண்ணை மிரட்டிய நபர்!

Man Threatened Woman By Killing Himself | கோயம்புத்தூரில் வடமாநில பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த ரமேஷ் என்ற நபர் அந்த பெண், உறவை துண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்வேன் என்று மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. தீக்குளித்துவிடுவேன் என பெண்ணை மிரட்டிய நபர்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Nov 2025 08:49 AM IST

மேட்டுப்பாளையம், நவம்பர் 10 : கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டம், அன்னூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், கல்லூரில் படித்து வரும் தனது இரண்டு மகள்களுடன் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர்களுடன் 34 வயதான ரமேஷ் குமார் என்ற நபரும் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

வடமாநில பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த ரமேஷ்

ரமேஷ் வடமாநில பெண்ணின் வீட்டில் இருந்த நிலையில், அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் ஜோடியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதனை அடுத்து அந்த பெண், ரமேஷ் உடனான உறவை துண்டித்துக்கொண்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.

இதையும் படிங்க : ரூ.2 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தி கொலை செய்த நபர்…. சுட்டுப்பிடித்த போலீசார்… ஓசூர் அருகே பரபரப்பு

தொடர்ந்து பழக வலியுறுத்திய ரமேஷ்

ரமேஷை அந்த பெண் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அந்த பெண் நவம்பர் 08, 2025 அன்று அங்குள்ள ஊராட்சி பள்ளி அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ரமேஷ் தன்னுடன் தொடர்ந்து பழகுமாறு வலியுறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், போலீஸில் தெரிவித்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டு மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : கோவை வன்கொடுமை வழக்கு : அந்த மாணவியும் காரணம் – நடிகை கஸ்தூரியின் பேச்சால் சர்ச்சை

தற்கொலை மிரட்டல் விடுத்த  ரமேஷ்

பின்னர் மண் எண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த பெண் புகார் அளித்த நிலையில், உடனடியாக அந்த இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கையில் இருந்த தீப்பெட்டையை காட்டி கொலுத்திக்கொள்வேன் என்றும், அனைவரையும் கட்டி பிடித்து கொன்று விடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.