Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீப்பிடித்த கார்… உடல் கருகி உயிரிழந்த புது மாப்பிள்ளை – திருவாரூர் அருகே பரபரப்பு

Car fire tragedy Tiruvarur: திருவாரூர் அருகே தன் மனைவியை பார்த்து ஊர் திரும்பிய நபர், விபத்தில் சிக்கி கார் தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி வெறும் 5 மாதங்களே ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தீப்பிடித்த கார்… உடல் கருகி உயிரிழந்த புது மாப்பிள்ளை – திருவாரூர் அருகே பரபரப்பு
விபத்தில் உயிரிழந்த ரஃபீக்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Nov 2025 08:24 AM IST

திருவாரூர், நவம்பர் 9: திருவாரூர் (Thiruvarur) அருகே நடந்த சாலை விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாக திருமணம் ஆன இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை சாலையில் நவம்பர் 8, 2025 அன்று இரவு முகமது ரபீக்  என்ற இளைஞர் தனது காரில் பயணம் செய்துள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், திருமணமாகி வெறும் 5 மாதங்களே ஆனதாகவும் கூறப்படுகிறது. மனைவியை பார்த்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை

திருவாரூரைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். தற்போது 29 வயதாகும் இவரதுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் தான் திருமணமாகியிருக்கிறது. இந்த நிலையில் அவர் தன் மனைவியைப் பார்த்து விட்டு திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் நவம்பர் 8, 2025 அன்று தனது சொந்த ஊருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்.  இந்த நிலையில், அவர் சென்ற கார் திருத்துறைப்பூண்டி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது.  இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் உடனே தீப்பிடித்து எரிந்தாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பணம் கொடுக்கல், வாங்கலால் வந்த சிக்கல்.. முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்!

விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்

இதனையடுத்து உள்ளே சிக்கியிருந்த ரபீக், காரில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உடனடியாக அப்பகுதிக்கு வந்த,  தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ரஃபீக்கை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.

இந்த நிலையில், ரபீக்கின் உடல் தீவிரமாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரமான விபத்தில், வெறும் ஐந்து மாதங்களுக்கு முன்தான் திருமணம் ஆன ரபீக் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் சீண்டல்.. போக்ஸோ வழக்கில் ஆண் ஆசிரியர் கைது..

அந்த பகுதியில் தொடர் விபத்துக்கள் நடப்பதாகவும் போதிய மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.