Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பணம் கொடுக்கல், வாங்கலால் வந்த சிக்கல்.. முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்!

Woman Brutally Killed in Money Issue | சிவகங்கையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லால் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் கொடுக்கல், வாங்கலால் வந்த சிக்கல்.. முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்!
கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலை செய்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Nov 2025 08:45 AM IST

காரைக்குடி, நவம்பர் 08 : சிவகங்கை (Sivagangai) மாவட்டம், காரைக்குடி, மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிக்குமார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகேஸ்வரிக்கு நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் தெரிந்தவர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நவம்பர் 06, 2025 அன்று அவர் காட்டுப்பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை பிண்ணனி – விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்கள்

மகேஸ்வரியின் காரை சசிக்குமார் என்ற நபர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் தான் மகேஸ்வரியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் பழகத்தை வைத்திருந்த மகேஸ்வரி, தனக்கு பண தேவை இருப்பதாக தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதன்படி அந்த ஓட்டுநர் தனக்கு தெரிந்த நபரிடம் இருந்து பெரிய தொகையை வாங்கி மகேஸ்வரிக்கு கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மகேஸ்வரி இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கோவையில் பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் – வீடியோ மூலம் உண்மையை சொன்ன பெண் – அதிர்ச்சி தகவல்

கொலையில் முடிந்த வாக்குவாதம்

சம்பவத்தன்று காரில் மகேஸ்வரியை அழைத்துச் சென்ற நிலையில், அப்போது அவரிடம் பணத்தை திரும்ப தரும்படி சசிக்குமார் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சசிக்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து மகேஸ்வரியின் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : சென்னையில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி பலி…. டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

தீவிர விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த நிலையில், இந்த கொலை விவகாரம் தொடர்பாக  சசிக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த நகைகளை மீட்டுள்ளனர். அப்போது மீதமுள்ள நகையை கடையில் அடகு வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தில் சசிக்குமாரை தவிர வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம், கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முகம் சிதைக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.