Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் சீண்டல்.. போக்ஸோ வழக்கில் ஆண் ஆசிரியர் கைது..

Madurai Crime News: மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபலமான அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஆண் ஆசிரியர் பாலியல் தொல்லை தருவதாக கூறி புகார் அளித்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் சீண்டல்.. போக்ஸோ வழக்கில் ஆண் ஆசிரியர் கைது..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Nov 2025 07:34 AM IST

மதுரை, நவம்பர் 8, 2025: மதுரையில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக ஆண் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மீதான மாணவிகள் புகாரில் நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபலமான அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:

இங்கு பயிலும் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாகவும் பள்ளி வகுப்புகளின் போது ஆபாசமாக பேசுவதாகவும் மாணவிகளிடம் தவறான வீடியோக்களை காண்பித்து தொந்தரவு அளிப்பதாகவும் கூறி மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

இந்நிலையில் மாணவிகள் அளித்த புகாரின் கீழ் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாணவிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் மாணவிகள் புகார்:

அந்த புகார் மனுவில் பள்ளியில் உள்ள ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாகவும், ஆண் ஆசிரியருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும் துணை தலைமை ஆசிரியரும் செயல்படுவதாகவும், உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு உள்ளாக பிரச்சனையை உருவாக்கி இரு தரப்பாக மாற்றி விடுகிறார் எனவும் பள்ளியில் மாணவர்கள் மது அருந்திவிட்டு வருகை தருகிறார்கள் அதனை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ரிப்போர்ட்..

மேலும், மாணவர்களுடைய பெற்றோர்களும் மாணவிகளை ஆபாசமாக தவறாக பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விடுவதாகவும் அதனால் பள்ளி வகுப்பறைகளில் பீடி சிகரெட் துண்டுகள் கிடப்பதாகவும் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்ஸோ வழக்கில் கைது:

அப்பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் மீது பாலியல் ரீதியான தொந்தரவு அளிப்பதாகவும் அதற்கு உதவியாக இருப்பதாகவும் கூறி புகார் அளித்த நிலையில், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் ஆகிய மூன்று பேர் மீது திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.