5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், நவம்பர் 8, 2025 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், நவம்பர் 8, 2025: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 8, 2025 அன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 9, 2025 தேதியான நாளை நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நவம்பர் 10, 2025 முதல் நவம்பர் 13, 2025 வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடரும் மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்! சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளூரில் பதிவான 10 செ.மீ மழை:
தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து சற்று வறண்ட வானிலை நிலவுகிறது. சில இடங்களில் மட்டுமே நல்ல கனமழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 10, வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 8, ஆவடி (திருவள்ளூர்), கலவை AWS (ராணிப்பேட்டை), மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை), மண்டலம் 01 எண்ணூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 7,
மேலும் படிக்க: கோவையில் பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் – வீடியோ மூலம் உண்மையை சொன்ன பெண் – அதிர்ச்சி தகவல்
மண்டலம் 02 மணலி (W 17) (சென்னை), வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 6, வாணியம்பாடி (திருப்பத்தூர்), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.