Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திக் திக் நிமிடங்கள்.. 21 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்த நுரையீரல் – சென்னை மெட்ரோ சாதனை

Chennai Metro life-saving mission : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட நுரையீரல் சென்னை மெட்ரோ ரயில் மூலம் வெறும் 21 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்திருக்கிறது. மிக முக்கியமான சேவையயை செய்த மெட்ரோ நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன.

திக் திக் நிமிடங்கள்.. 21 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்த நுரையீரல் – சென்னை மெட்ரோ சாதனை
மெட்ரோ மூலம் எடுத்து செல்லப்பட்ட நுரையீரல்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Nov 2025 07:49 AM IST

சென்னை, நவம்பர் 9 :  நகரப் போக்குவரத்துக்கு அப்பாற்பட்டு, அவசர மருத்துவ சேவைகளிலும் சென்னை மெட்ரோ ரயில் (Metro Train) சேவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. மீண்டும் ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் அதிரடியாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.  கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்  (Bengaluru) இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட நுரையீரல், சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏ.ஜி.-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை வெறும் 21 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பரபரப்பான கட்டத்தில் துரிதமாக செயல்பட்டு, அதனைத்து மெட்ரோ ஊழியர்களையும் ஒருங்கிணைத்து இந்த சாதனையை சென்னை மெட்ரோ செய்திருக்கிறது.

உயிர்காக்கும் சிகிச்சையில் சென்னை மெட்ரோவின் முக்கிய பங்கு

சென்னையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் இருந்து நுரையீரல் உறுப்பு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய பரபரப்பான நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் தங்களது ஊழியர்களை ஒருங்கிணைத்து வெறும் 21 நிமிடங்களில் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலயைத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதனை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : இந்த ரயில்கள் எழும்பூர் செல்லாது… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு – என்னென்ன ரயில்கள்?

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் எக்ஸ் பதிவு

 

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தேவையான உறுப்பு 08.11.2025 அன்று மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை சரியான நேரத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி, உயிர்காக்கும் இந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மெட்ரோ ரயில் திருத்த விதிகள்  -2003ன் கீழ் வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இனி கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது – பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு – காரணம் என்ன?

21 நிமிடங்களில் அதிவேக ஒருங்கிணைப்பு

நுரையீரல் தான உறுப்பு கொண்ட மருத்துவக் குழு, பிற்பகல் 2.07 மணிக்கு விமான நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்தே மெட்ரோ நிர்வாக அதிகாரிகளும் பணியாளர்களும் ஒருங்கிணைந்து, மருத்துவக் குழுவை உடனடியாக ரயிலில் ஏற்றி அனுப்பினர். மொத்தம் 7 ரயில் நிலையங்கள் கடந்து, அவர்கள் சரியாக 2.28 மணிக்குள் ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸில் கிரீம்ஸ் ரோட்டிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர், அங்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருந்தது.

மெட்ரோவின் மனிதநேய சேவை

சாதாரண நகரப் போக்குவரத்து மட்டுமல்லாமல், இதுபோன்ற அவசர மருத்துவ உதவிகளிலும் தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக சமூக வலைதளங்களில், சென்னை மெட்ரோ – உயிர் காப்பாற்றும் ரயில் சேவை என பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.