இந்த ரயில்கள் எழும்பூர் செல்லாது… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு – என்னென்ன ரயில்கள்?
Railway Maintenance Work Alert: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை எழும்பூர் செல்லும் ரயில்கள் இனி தாம்பரம் வரை மட்டுமே செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்தெந்த ரயில்கள் தாம்பரம் வரை செல்லும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 14: பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 10 முதல் 29, 2025 வரை பல ரயில்களின் (Train) சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாள பராமரிப்பு மற்றும் மின் இணைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் (Egmore) இடையிலான சில அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ரயில் சேவைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால், பயணிகள் கடைசி நேர சிக்கலை தவிர்க்க, முன் கூட்டியே தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்
பராமரிப்பு பணிகள் காரணமாக எழும்பூர் வரை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றங்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 10, 2025 திங்கள்கிழமை முதல் வருகிற நவம்பர் 29, 2025 வரை எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் எழும்பூர் செல்லும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்களின் விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.




- அதன் படி நவம்பர் 10 முதல் 29 , 2025 வரை உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சாவூரில் இருந்து தாம்பரம் இடையே மட்டுமே இயக்கப்படும். எழும்பூர் செல்லாது. எனவே இந்த ரயில்களில் பயணிப்பவர்கள் முன் கூட்டியே திட்டமிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதே காலக்கட்டத்தில் கொல்லம் – சென்னை இடையே செல்லும் அனந்தபுரி அதிவிரைவு ரயில் நவம்பர் 10, 2025 முதல் நவம்பர் 29, 2025 வரை கொல்லத்தில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
- அதே போல நவம்பர் 10, 2025 முதல் நவம்பர் 29, 2025 வரை ராமேஸ்வரம் – சென்னை இடையே இயக்கப்படும் சேது அதிவிரைவு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இரவு சரியாக 8.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.35 மணிக்கு வந்தடையும்.
- அதே போல இதே காலக்கட்டத்தில் ராமேஸ்வரம் – சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை சரியாக 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
- அதே போல இதே காலக்கட்டத்தில் குருவாயூர் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்தே இயக்கப்படும்.
- மேலும், நவம்பர் 10, 2025 முதல் நவம்பர் 29, 2025 வரை சென்னை எழும்பூர் – மும்பை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
இதையும் படிக்க : மாணவர்கள் கவனத்திற்கு.. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே..
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் தண்டவாள மேம்பாட்டு பணிகள் காரணமாக, ரயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பயணிகள் தங்களது பயண திட்டங்களை இதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.