Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவுக்கு செல்ல சிறப்பு ரயில்கள்… எப்போ? எங்கிருந்து கிளம்புகிறது?

Special Trains: திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அக்டோபர் 27, 2025 அன்று கொண்டாடப்படவிருக்கிற நிலையில், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே 2 சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவுக்கு செல்ல சிறப்பு ரயில்கள்… எப்போ? எங்கிருந்து கிளம்புகிறது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Oct 2025 22:08 PM IST

ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சஷ்டி திதியில் நடைபெறும் சூரசம்ஹார விழா திருச்செந்தூரில்  (Thiruchendur) ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா,  முருகன் சூரபத்மனை அழித்து தேவர்களைக் காப்பாற்றிய நிகழ்வை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சஷ்டி முதல்  7 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹாரம் மற்றும் அதன் அடுத்த நாளான சப்தமி திதி திருக்கல்யாண நிகழ்வில்  முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு அதிக அளவில் வருவது வழக்கம். இந்த நிலையில் இதற்காக சிறப்பு ரயில்கள் (Train) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்

திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 27, 2025 அன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே மதுரை மண்டலம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இதையும் படிக்க : மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு..

திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு அக்டோபர் 26, 2025 இரவு 9.35 மணியளவில் தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில், அக்டோபர் 27, 2025 அன்று காலை 6 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்வருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் , திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

அதே போல சூரசம்ஹாரத்தில் பங்கேற்கும் பக்தர்கள் திரும்ப ஊர் திரும்பவதற்காக அக்டோபர் 27, 2025 அன்று இரவு 10.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து கிளம்பும் ரயில், அக்டோபர் 28, 2025 காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் ஆறுமுகநேரி, நசரேத், ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதையும் படிக்க : ஆந்திராவில் கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னைக்கு என்ன நிலை? பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

பக்தர்கள் கவனிக்க வேண்டியது

  • பக்தர்கள் அதிகம் வரும் வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே டிக்கெட் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • சூரசம்ஹாரத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பும் பக்தர்களுக்காக அன்றிரவே சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மேலும், பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
  • கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக ரயில்வே காவலர்களும் பாதுகாப்பு வசதிக்காக பணியில் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.