மாணவர்கள் கவனத்திற்கு.. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே..
10th And 12th Public Exam: 10 ஆம் வகுப்பு பொது தேர்வு 2026 மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு பொது தேர்வு 2026 மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 2026 மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
                                சென்னை, நவம்பர் 4, 2025: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை இன்று, அதாவது நவம்பர் 4, 2025 அன்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநிலத்தின் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்றும், அந்தக் கூட்டத்தின் முடிவில் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதை கருத்தில் கொண்டு தேர்வுத் தேதிகளில் இறுதி மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு:
அந்த வகையில், இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் உள்ள 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். இதன்படி, 10 ஆம் வகுப்பு பொது தேர்வு 2026 மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு பொது தேர்வு 2026 மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 2026 மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர்தான் இந்தப் பொதுத் தேர்வு அட்டவணையை அறிவித்துள்ளோம். 12 ஆம் வகுப்பு ‘அக்கவுண்டன்சி’ தேர்விற்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுத வேண்டும்,” என தெரிவித்தார்.
10 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை:
- மார்ச் 11: தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்
 - மார்ச் 16: ஆங்கிலம்
 - மார்ச் 25: கணிதம்
 - மார்ச் 30: அறிவியல்
 - ஏப்ரல் 2: சமூக அறிவியல்
 - ஏப்ரல் 6: விருப்பப் பாடங்கள்
 
10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 20, 2026 அன்று வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை.
12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை:
- மார்ச் 2: தமிழ் மொழிப் பாடங்கள்
 - மார்ச் 5: ஆங்கிலம்
 - மார்ச் 9: வேதியியல்
 - மார்ச் 11: இயற்பியல்
 - மார்ச் 17: கணிதவியல்
 - மார்ச் 26: கணினி அறிவியல்