சென்னையில் தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிப்பு..
Sanitization Workers Protest: தூய்மை பணியாளர்கள், கோரிக்கை நிறைவேற்றப்படாமல் தனியார்மயமாக்கப்படுவதால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை ரிப்பன் மாளிகையில் மண்டலம் 5 மற்றும் 6-இல் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னை, நவம்பர் 8, 2025: சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் தங்களுடைய போராட்டத்தை நவம்பர் 8, 2025 அன்று 100வது நாளாக முன்னெடுக்க உள்ள நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் ஐந்து இடங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தூய்மை பணியாளர்கள் “தனியார்மயமாக்கம் கூடாது” என்றும், “தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் தனியார்மயமாக்கப்படுவதால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை ரிப்பன் மாளிகையில் மண்டலம் 5 மற்றும் 6-இல் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: பணம் கொடுக்கல், வாங்கலால் வந்த சிக்கல்.. முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்!
தூய்மை பணியாளர்கள் போராட்டம்:
மண்டலம் 5 மற்றும் 6 யை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இரண்டு மண்டலங்களிலும் தனியார் மையத்தை கைவிட வேண்டும் பழைய முறைப்படி தங்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை ரிப்பன் மாளிகை வெளியே மேற்கொண்டனர்.
ஆகஸ்ட் 13 நள்ளிரவு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு பல்வேறு கட்டங்களாக இரண்டு மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்ட போதும் அவர்களை காவலர்கள் ஆங்காங்கே கைது செய்தனர்.
மேலும் படிக்க: பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் சீண்டல்.. போக்ஸோ வழக்கில் ஆண் ஆசிரியர் கைது..
ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிப்பு:
2 நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரை கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போதும் அவர்களை காவலர்கள் வலுகட்டாயமாக கைது செய்தனர். இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பழைய முறைப்படி பணி வழங்க வேண்டும் தனியார் மையத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 100 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை தலைமைச்செயலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டம் முதலில் தொடங்கிய ரிப்பன் மாளிகை முன்பாக இன்று தூய்மை பணியாளர்கள் போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டு்ள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம் நடத்தக்கூடும் என தகவல் வெளியான நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.