Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் – திமுக அறிவிப்பு

SIR Scheme : இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் என்ற பெயரில் தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பணிகளுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் – திமுக அறிவிப்பு
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Nov 2025 21:12 PM IST

சென்னை, நவம்பர் 6: தமிழகத்தில் நடைப்பெற்று வரும் எஸ்ஐஆர் (SIR) என அழைக்கப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த  பணிக்கு எதிராக, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், நவம்பர் 11, 2025 அன்று மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. தமிழகத்தில் வருகிற 2026 ஆண் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக திமுக (DMK) உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே வெளியான அறிவிப்பில்,  வருகிற நவம்பர் 11, 2025 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடக்கத்திலிருந்தே எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் தன்னிச்சையான மன நிலையுடன் செயல்படுகிறது.  தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை இந்தி தேர்தல் ஆணைம் மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்க : அன்புமணியை அமைச்சராக்கியது தவறு: வேதனை வெளிப்படுத்திய ராமதாஸ்!!

எஸ்ஐஆர் திட்டத்துக்கு எதிராக ஆர்பாட்டம்

 

இதையும் படிக்க : TVK Vijay Speech: சொல்ல முடியாத அளவுக்கு வேதனை.. தவெக தலைவர் விஜய் உருக்கம்..!

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த திட்டம் மூலம், சிறுபான்மை சமூக வாக்குகளை நீக்கவும், பாஜக எதிர்ப்பு வாக்காளர்களை குறிவைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் மத்திய அரசின் பாதுகாப்பில் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதி உள்ளவர்களின் பெயரை நீக்கி, தகுதி இல்லாதவர்களை சேர்க்கும் நோக்கத்துடன் செயல்படும் இந்த  திட்டம், மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சி.

இது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளது.  இதனையடுத்து வருகிற நவம்பர் 11, 2025 அன்று எஸ்ஐஆர் திட்டத்துக்கு எதிராக ஆர்பாட்டம் அறிவித்துள்ளதால் அது இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.