Karur Stampede: கரூர் நெரிசலுக்கு காரணம் திமுகவின் அலட்சியமா? தவெகவின் முதிர்ச்சியற்ற திறனா? விரிவான பார்வை!
2025 Karur Crowd Crush: கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து வேகவேகமாக நடந்த பிரேத பரிசோதனைகள், அவசர இறுதி சடங்குகள் மற்றும் சம்பவ இடத்தில் நடந்த மின்வெட்டுகள் என பல விஷயங்கள் மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றன.
சென்னை, நவம்பர் 5: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Karur Stampede) 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு வரலாற்றில் மிகவும் இருண்ட தருணங்களில் ஒன்றாக அமைந்தது. இது ஆளும் திமுகவின் ஆட்சி மற்றும் தவெகவின் (TVK) கவனக்குறைவின் நிகழ்வால் அமைந்தது. 2025 நவம்பர் 5ம் தேதியான இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெகவின் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் திமுகவை கடுமையாக விமர்சித்தனர். இவர்களின் பேச்சு முழுக்க முழுக்க கரூர் கூட்ட நெரிசலுக்கு தவெகவே காரணம் என்று கூறியதாகவும் திமுக வன்மத்தை வெளிபடுத்தியதாகவும் கூறினார். இருப்பினும், ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பொது நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டு, பல அப்பாவி மக்களில் உயிர்களை பலிகொண்டது. மேலும், இது திமுக தலைமையிலான அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் உடைத்தது. கரூர் சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என்று தவெகவும், தவெகதான் காரணம் என்று திமுகவும் குறைக்கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என இரு கட்சிகளின் மீது மக்கள் மாறி மாறி குறைகூறி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து நீதி கோரி வருகின்றன.
ALSO READ: சொல்ல முடியாத அளவுக்கு வேதனை.. தவெக தலைவர் விஜய் உருக்கம்..!
திமுக அரசின் அலட்சியமா..?
கரூர் துயர சம்பவம் திமுக அரசு பொது பாதுகாப்பை கையாளும் விதம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டம் அதிகமாக சேருவது குறித்த முன்னெச்சரிக்கைகளை தமிழ்நாடு அரசு புறக்கணித்ததாகவும், சரியான இடத்தை உறுதி செய்ய தவறியதாகவும், போதுமான எண்ணிக்கையிலான காவல்துறையினர் நியமிக்கப்பட்டவில்லை என்று தொடர்ந்து எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் விபத்து அல்ல என்றும், நிர்வாக ஒழுக்கமற்ற அரசாங்கத்தின் அலட்சியம் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். மேலும், திமுகவின் இந்த 4 ஆண்டுகளில் நடந்தது இது முதல்முறையல்ல.




இதற்கு முன்பாக, கரூர் பள்ளி வன்முறை, சென்னை மெரினாவில் நடந்த விமான சகாச நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி என பல உதாரணங்கள் நடந்துள்ளது. இது முதல்முறை நடந்தபோதே, அடுத்தமுறை உளவுதுறை உதவியுடன் திமுக அரசு தடுக்க தவறியது என்றே கூறலாம். கிடைத்த தகவலின்படி, கரூர் துயர சம்பவத்தின்போது கரூர் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, கூட்ட நெரிசலின்போது தவெக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி, கரூர் சம்பவம் குறித்து பேசியவர்கள் மீது வழக்குப் பதிவு என திமுக மீது ஒரு தரப்பினர் புகார் கூறுகிறார்கள்.
மூடிமறைக்க முயற்சியா..?
கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து வேகவேகமாக நடந்த பிரேத பரிசோதனைகள், அவசர இறுதி சடங்குகள் மற்றும் சம்பவ இடத்தில் நடந்த மின்வெட்டுகள் என பல விஷயங்கள் மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டதாகவும், ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அறிவித்த திமுகவின் உடனடி நடவடிக்கை, சிபிஐயின் மத்திய விசாரணையை முன்கூட்டியே தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மேலும், சம்பவத்தின்போது திமுக அமைச்சர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினர்.
ALSO READ: நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!
தவெகவின் தெளிவற்ற பதில்:
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கரூர் சம்பவம் தொடர்பாக ஏமாற்றமளிக்கும் வகையில், தெளிவற்ற பதிலை மாற்றி மாற்றி வெளியிட்டனர். இதுபோன்ற துக்க நேரத்தின்போது பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்கு பதிலாக, அமைதிக்காத்தது கட்சியின் நிர்வாக முதிர்ச்சியற்ற திறனை காட்டியது. மேலும், நெருக்கடிகளை திறம்பட நிர்வகிக்கும் திறன் குறித்தும் கேள்வி எழுகிறது.
யார் காரணம்..?
கரூர் கூட்டநெரிசலுக்கு தவெக, திமுக என 2 கட்சிகளுக்கும் சம அளவு பங்கு உண்டு என்று கூறலாம். போதிய பாதுகாப்பின்மை, இடப்பற்றாக்குறை போன்ற காரணத்திற்காக ஆளும் திமுக மீதும், நேரம் தவறல், முறைப்படுத்த தவறியது போன்ற காரணத்திற்காக தவெக மீதும் குறைகள் இருக்கதான் செய்கிறது. இதுவரை நடந்த தவறுகள் நடந்து இருந்தாலும், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இதுபோன்ற தவறுகள் எப்போதும் நடைபெறக்கூடாது. எந்தவொரு கூட்டத்திற்கு முன்பு, போதிய பாதுகாப்பு தருவது ஆளும் அரசாங்கம் மற்றும் நடத்தும் கட்சியினரின் முழு பொறுப்பாகும். மேலும், மக்களும் அரசியல் மற்றும் பிற கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பு, சுயசிந்தனையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். எந்த கூட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்து செல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தாலே போதுமானது. எப்படியான பெரும் விபத்துகளையும் தடுக்கலாம்.