நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!
Tvk leader vijay speech: கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மட்டுமில்லாமல், நிஜத்திலும் மக்களும் முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக விஜய் சாடியுள்ளார். மேலும், இது முதல்வருக்கு புரியவில்லை என்றால், 2026 தேர்தலில் மக்கள் இன்னும் ஆழமாக அழுத்தமாகப் புரிய வைப்பார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.
சென்னை, நவம்பர் 05: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? என்று தவெக தலைவர் விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், அவர் நிர்வாகிகளுடன் ஆலோசித்து பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கூட்டம் தொடங்கியதும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
30 நாட்களும் கண்ணீர் சிந்திய விஜய்:
இதைத்தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யை முன்மொழிந்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது. அதோடு, 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் என பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கூட்டத்தில் அடுத்தடுத்து பேசினர். அப்போது, மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது. கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டும் அல்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.




வேதனை, வலியில் இருந்தேன்:
தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய விஜய், நம் குடும்ப உறவுகளை இழந்ததால், சொல்ல முடியாத அளவுக்கு வேதனையிலும், வலியிலும் இவ்வளவு நாட்களாக இருந்ததாக கூறி தனது பேச்சை தொடங்கினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் அமைதியாக இருக்க வேண்டியது நமது கடமை என்றும் அப்படி அமைதியாக இருக்கும் போது நம்மைப்பற்றி வன்ம அரசியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.
முதல்வர் மறந்துவிட்டாரா?
தொடர்ந்து பேசிய அவர், கரூர் சம்பவம் தொடர்பாக, நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், நியாயமான விசாரணை மூலமே இந்த சந்தேகத்தை மீட்டெடுத்தாக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..
2 கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி:
அதோடு, உண்மை நிலையை தெளிவுபடுத்தத்தான் என்று ஏதோ சட்டரீதியாக, சத்தியத்திற்காக நடந்ததாக சாமர்த்தியமாக பேசுவதாக பேசி இருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அவர், 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும் முதல்வர் சொன்னது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய், சப்பை கட்டு என்று நான் சொல்லவில்லை உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்றும் கூறினார். மேலும், சட்டமன்ற தேர்தலில் திமுக – தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி என்றும் தெரிவித்தார்.