Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயணிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க..!

Metro Rail Service: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பச்சை வழித்தடமும் நீல வழித்தடமும் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

பயணிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க..!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Oct 2025 08:52 AM IST

சென்னை, அக்டோபர் 20, 2025: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று, அதாவது அக்டோபர் 20,  2025 முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றம் வரவிருக்கும் அக்டோபர் 24, 2025 வரை மேற்கொள்ளப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பெரும்பாலானோர் மெட்ரோ ரயில் சேவையை நம்பியுள்ளனர். மெட்ரோ ரயில் சேவையில் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் சேவை மூலம் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிக்காக புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் விமான நிலையம் முதல் விக்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்:

தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ சேவையை நம்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பச்சை வழித்தடமும் நீல வழித்தடமும் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்த பணி மிகவும் அவசியமானது.

மேலும் படிக்க: சென்னையில் தீபாவளி காலை பொழுது மழையுடன் தொடங்கும்.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

இந்த பராமரிப்பு பணிகள் 20 அக்டோபர் 2025 முதல் 24 அக்டோபர் 2025 வரை, காலை 5 மணி முதல் 6.30 மணி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காலத்தில் மெட்ரோ ரயில் சேவையின் இயக்க நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் 6.30 மணி வரை, வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6.30 மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இன்றி இயக்கப்படும்.

இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு மேற்கொள்ளும் பகுதிகளுக்கே மட்டுமே பொருந்தும்.

மேலும் படிக்க: பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்.. ஆய்வு மேற்கொண்ட மின்சாரதுறை அமைச்சர் சிவசங்கர்..

மக்கள் தங்களது பயணத்தை திட்டமிட அறிவுறுத்தல்:

பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்ளுகிறது. ரயில் பாதை பராமரிப்பு பணிகள் ரயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம்.

பயணிகள் அனைவரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் பயன்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.