Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை வன்கொடுமை வழக்கு : அந்த மாணவியும் காரணம் – நடிகை கஸ்தூரியின் பேச்சால் சர்ச்சை

Coimbatore assault case: கோவை வன்கொடுமை வழக்கை குறித்து நடிகையும் பாஜக (BJP) நிர்வாகியுமான கஸ்தூரி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய அவர், அந்த மாணவியும், அவரது நண்பரும் இரவு நேரத்தில், இருட்டான இடத்தில் தனியாக சென்றதும் இந்த சம்பவத்துக்கு ஒரு காரணம் என்றார்.

கோவை வன்கொடுமை வழக்கு : அந்த மாணவியும் காரணம் – நடிகை கஸ்தூரியின் பேச்சால் சர்ச்சை
கஸ்தூரி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Nov 2025 10:18 AM IST

கோவை வன்கொடுமை வழக்கை குறித்து நடிகையும் பாஜக (BJP) நிர்வாகியுமான கஸ்தூரி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2, 2025 அன்று, கோயம்புத்தூர் (Coimbatore) விமான நிலையம் பின்புறம் கார் ஒன்றில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கி, மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த வழக்கில் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர், குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர்.  இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பலரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து

இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 8, 2025 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை மற்றும் பாஜக நிர்வாகி கஸ்தூரி, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து தன் கருத்தை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “அந்த மாணவியும், அவரது நண்பரும் இரவு நேரத்தில், இருட்டான இடத்தில் தனியாக சென்றதும் இந்த சம்பவத்துக்கு ஒரு காரணம். பெண்கள் மட்டுமல்ல, இளைஞர்கள் யாராக இருந்தாலும் இரவு நேரத்தில் இருட்டான இடங்களுக்கு செல்லக் கூடாது. அப்படி தேவையில்லாத இடங்களுக்கு செல்லும் போது இத்தகைய ஆபத்துகள் நேரலாம்” என கூறினார்.

இதையும் படிக்க : இந்த 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேலும் பேசிய அவர்,  இது காதல் காரணமாகவோ, வேறு காரணமாகவோ இருந்தாலும் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல கூடாது. இது யாருக்கும் பொருந்தும். எத்தனையோ பெற்றோர்கள் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி கனவுகளோடு உங்களை படிக்க அனுப்புகிறார்கள். படிக்க போ என்று சொன்னால் நீங்கள் செய்வது என்ன? நான் சொல்வது பெண்ணியத்திற்கு எதிரானது என்று சொன்னால் அந்தப் பெண்ணியமே வேண்டாம்.” என்றும் கஸ்தூரி பேசினார்.

இதையும் படிக்க : தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் – பரபரப்பு சம்பவம்

கஸ்தூரியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

கஸ்தூரியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள், “இத்தகைய கருத்துகள் குற்றவாளிகளை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மாணவியை குற்றம் சாட்டும் வகையில் உள்ளதாக அரசியல் அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  பலர், “பெண் பாதுகாப்பை வலியுறுத்த வேண்டிய நேரத்தில், பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டுவது தவறான முன்னுதாரணமாக அமையும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.