Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு

Vaiko’s new allegation : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் செய்த தவறுக்காக தான் இவர் தற்போது அனுவபிக்கிறார் என்றும் தெரிவித்தார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு
ஓ.பன்னீர்செல்வம் - வைகோ
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Nov 2025 15:00 PM IST

சென்னை, நவம்பர் 7 : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (வைகோ), கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் (Jayalalitha),  ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவலை வழங்கியதாகவும், அந்த தவறின் விளைவாகவும் இன்று அவர் அனுபவித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஜெயலலிதா தரப்பில் அழைப்புவிடுக்கப்பட்டபோது அதனை விரும்பாத ஓ. பன்னீர் செல்வம் தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். பின்னர் தான் அந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணியில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் எழுந்தது. அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் என்னைச் சந்திக்க வந்தார்கள்.

இதையும் படிக்க : பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட்? அரசு பரிந்துரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு!!

அவர்களிடம் நான், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் தரப்போகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 12 தொகுதிகள் தருவதாக சொன்னார்கள்.  நான், இதை ஏற்க முடியாது, ஜெயலலிதா அதற்கு மேல் தர சம்மதித்தால், கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என்றேன். அதற்கு அவர்கள் தாங்கள் ஜெயலலிதாவிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்றார்கள்.

‘ஜெயலிலதாவிடம் மாற்றி சொன்ன ஓபிஎஸ்’

ஆனால் அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிடம் சென்று, ‘வைகோ கூட்டணியில் தொடர விருப்பமில்லை, நாங்கள் சொன்ன தொகுதிக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் கூட்டணியில் இருந்து விலகுகிறார் என்று பொய் சொன்னாராம். இதுதான் முக்கியமான காரணம். பின்னர் தினமணி வைத்தியநாதன் எனக்கு சொன்னது தான் உண்மை தெரிந்தது. அவர் என்னிடம், ‘அம்மா 15 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தார்’. அதேபோல துக்ளக் சோவும் என்னைச் சந்தித்து, ‘நீங்கள் நேராகச் சென்று ஜெயலிலதாவைச் சந்தித்தால் கூட்டணி உறுதியாகும்’ என்று கூறினார்கள்.

இதையும் படிக்க : அன்புமணியை அமைச்சராக்கியது தவறு: வேதனை வெளிப்படுத்திய ராமதாஸ்!!

ஆனால் நான் அப்போது எல்லா செல்போன்களையும் ஆஃப் செய்துவிட்டேன், யாரும் என்னைத் தேட முடியாத இடத்தில் இருந்தேன். மாலை தான் வீட்டுக்கு வந்தேன். என் கையிலிருந்த போனைப் பார்த்தேன், ஓ.பன்னீர்செல்வம் எனக்கு அழைப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் அவர் ஒருபோதும் அழைக்கவில்லை. இப்போது அவர் அதற்கான பலனை அனுபவித்து வருகிறார். என்று வைகோ குற்றம்சாட்டினார்.