Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட்? அரசு பரிந்துரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு!!

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டங்​கள், ரோடு ஷோக்​கள் நடத்​து​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்​பது தொடர்​பான அனைத்​துக் கட்​சிக்​ கூட்டம் நேற்று நடை​பெற்​றது. இதில், விதிமுறைகள் வகுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட்? அரசு பரிந்துரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு!!
அனைத்துக் கட்சி கூட்டம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Nov 2025 06:54 AM IST

சென்னை, நவம்பர் 07: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான விதிமுறைகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக உட்பட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது அரசின் பரிந்துரை விவரங்கள் வழங்கப்பட்டன.

Also read: Karur Stampede: கரூர் நெரிசலுக்கு காரணம் திமுகவின் அலட்சியமா? தவெகவின் முதிர்ச்சியற்ற திறனா? விரிவான பார்வை!

முன்னதாக, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழக வரலாற்றில் இல்லாத அளவு ஒரு அரசியல் தலைவர் கூட்டத்தில் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது நாடேயே அதிர்ச்சியடைய செய்தது. இதைத்தொடர்ந்து, வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்குமாறு தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

ரூ.20 லட்சம் டெபாசிட் தொகை:

அதன்பேரில், அமைச்சர்கள் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சிப் பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது அரசின் பரிந்துரை விவரங்கள் வழங்கப்பட்டன. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொதுக்கூட்டத்தின்போது சேதம் ஏற்பட்டால் ஈடுசெய்வதற்காக, எதிர்பார்க்கப்படும் கூட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப டெபாசிட் தொகை நிர்ணயிக்கலாம். அதன்படி, 5,000 முதல் 10,000 பேர் வரை என்றால் ரூ.1 லட்சம், 10,000 முதல் 20,000 பேர் வரை ரூ.3 லட்சம், 20,000 முதல் 50,000 பேர் வரை ரூ.8 லட்சம், 50,000 பேருக்கு மேல் என்றால் ரூ.20 லட்சம் காப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும். மற்றஇடங்களுக்கு 21 நாட்கள் முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சியின் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அரசின் பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.

Also read: எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் – திமுக அறிவிப்பு

அரசின் பரிந்துரைகள் தொடர்பான கருத்துகளை தமிழக உள்துறைச் செயலருக்கு நவ.10-ம் தேதிக்குள் அஞ்சல் அல்லது மி்ன்னஞ்சலில் தெரிவிக்குமாறும், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உரிய மாற்றங்களுடன் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு:

இந்நிலையில், அரசின் வைப்புத் திட்ட பரிந்துரைக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளா காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிறுசிறு இயக்​கங்​கள், கட்​சிகள் போராட்​டங்​கள், ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்த வேண்​டும் என்​றால் வைப்​புத் தொகை முறையை எப்​படி ஏற்க முடி​யும். அரசின் வரைவு அறிக்கை மக்​களுக்கு அரசி​யல் சட்​டம் வழங்​கி​யுள்ள ஜனநாயக உரிமை​களைப் பறிப்​ப​தாக உள்​ளது என்றும் கூறியுள்ளன.