Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெப்பசலனம் காரணமாக மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன ரிப்போர்ட்..

Tamil Nadu Weather: வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக மழை பதிவாகும் நிலையில், தற்போது வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியான மழை இல்லாவிட்டாலும், விட்டு விட்டு ஒரு மணி நேரம் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பசலனம் காரணமாக மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2025 11:27 AM IST

வானிலை நிலவரம்: நவம்பர் 5, 2025 தேதியான இன்று, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவருகிறது. அக்டோபர் மாதத்தைப் பொருத்தவரையில் சுமார் 58 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நவம்பர் 6, 2025 தேதியான நாளையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பூதாகரமாக வெடித்த உட்கட்சி விவகாரம்.. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

வெப்பசலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்:


வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடைவிடாது மழை பதிவாகி வருகிறது. இதனைத் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக மழை பதிவாகும் நிலையில், தற்போது வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியான மழை இல்லாவிட்டாலும், விட்டு விட்டு ஒரு மணி நேரம் வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: வேகமாக சென்ற கார் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி.. விபத்து குறித்து வெளியான திடுக் தகவல்!

தமிழகத்தைப் பொறுத்தவரையில், நவம்பர் 5, 2025 தேதியான இன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வரவிருக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாத இறுதியில் ஒரு காற்றோட்டத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனினும், மொத்தமாக நவம்பர் மாத மழையை கணக்கிட்டால், அது இயல்பை விட குறைவாகவே இருக்கும் என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.