Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளி பேருந்து தாக்குதல்… குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு? எடப்பாடி பழனிசாமி கேள்வி

EPS Slams DMK Government : மயிலாடுதுறையில் சிலர்  மது போதையில் பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

பள்ளி பேருந்து தாக்குதல்… குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு? எடப்பாடி பழனிசாமி கேள்வி
எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Nov 2025 21:42 PM IST

சென்னை நவம்பர் 8:  மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுபோதையில் இளைஞர்கள் சிலர் பள்ளி பேருந்து (School Bus) மீது கல்விட்டு எறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதனையடுத்து பேருந்தில் இருக்கும் குழந்தைகள் அலறும் சத்தம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகும் நிலையில், பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறன்றனர். இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், தமிழகத்தில் சமீப காலமாகசட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது எனவும், குழந்தைகளுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் அதற்குப் பொறுப்பு யார்? எனவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

தமிழக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் சிலர்  மது போதையில் பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கடற்கரை சாலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ. ராஜராமன் தலை மற்றும் முகத்தில் கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக ஆட்சியில், பகல் நேரத்தில் சாலைகளிலேயே குற்றங்கள் நடப்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது.

இதையும் படிக்க : எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவு

 

பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடந்திருக்கிறது.  குழந்தைகளுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் அதற்குப் பொறுப்பு யார்? இந்த நிலைமை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்வார்? ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலை உருவாகிவிட்டது. இவ்வாறான சூழ்நிலையில் எப்போது, எங்கே, யாருடைய சடலம் கிடைக்கும் என்ற பயத்தில் மக்கள் வாழ்கின்றனர். இதுவே திமுக ஆட்சியின் ‘சட்ட ஒழுங்கு’ நிலைமை என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு

குற்றவாளிகளை காப்பாற்றும் ஆட்சி என குற்றச்சாட்டு

அவரது பதிவில் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளதாவது, “குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தவிக்கும் நிலை, பிடித்தாலும் சிறையில் வைக்க முடியாத பலவீனமான நிலையில் காவல்துறை இருக்கிறது. அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவது இதெல்லாம் ‘ஸ்டாலின் மாடல்’ திமுக ஆட்சியின் உண்மை நிலை. இந்த ஆட்சியில் குற்றவாளிகள் பயப்படுவதில்லை, மாறாக அவர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் நிலை உருவாகியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் திமுக அரசை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மக்களை பயமுறுத்தும் அளவுக்கு சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளது தற்போதைய அரசு என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.