Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட 12 பேர் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..

Admk Internal Issue: அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல், முருகன் நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 12 பேரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட 12 பேர் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Nov 2025 10:19 AM IST

சென்னை, நவம்பர் 7, 2025: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரது ஆதரவாளர்கள் 12 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவைப் பொருத்தவரையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து கட்சிக்குள் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அதுபோல், அதிமுகவிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: தண்ணீர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம்..

அதிமுக உட்கட்சி விவகாரம்:

இதனைத் தொடர்ந்து, சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தினார். ஆனால் உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலரும் தங்களது பொறுப்புகளில் இருந்து தாமாகவே ராஜினாமா செய்தனர். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டையன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்.. எத்தனை நாட்களுக்கு? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அதிமுகவில் பயணம் மேற்கொண்ட செங்கோட்டையன் திடீரென நீக்கப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரியாக மாறி செயல்பட்டு வருகிறார்” எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட 12 பேர் நீக்கம்:

இந்தச் சலசலப்பு இன்னும் அடங்காத நிலையில், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல், முருகன் நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியம் முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மௌத் ஈஸ்வரன், முத்துசாமி, அத்தாணி பகுதி கழக செயலாளர் எஸ். எஸ். ரமேஷ் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் 12 பேரும் நீக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.