Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் – பரபரப்பு சம்பவம்

Students Demand Justice : புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் – பரபரப்பு சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Nov 2025 17:59 PM IST

புதுச்சேரி   (Puducherry) கனகசெட்டிகுளம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை (Hospital) இயங்கி வருகிறது. இங்குள்ள செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சிக்காக செல்லும்போது, அங்கு எக்ஸ்ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரியும் இரண்டு பேர் 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  இரண்டு லேப் டெக்னீசியன்களையும் கைது செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சம்வபம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். 

மருத்துவக் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 லேப் டெக்னிஷியன்கள் இருவரை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் இதுவரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் சீண்டல்.. போக்ஸோ வழக்கில் ஆண் ஆசிரியர் கைது..

பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரியின் இதற்காக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களும் விசாரணை நடத்தி குற்றம் நடந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தீவிரமடையும் போராட்டம்

இந்நிலையில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களை மூடி மறைக்கும் தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களை பணிநீக்கம் செய்து,  அவர்கள் மீது சட்ட ரீதியான வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்டல்லூரி மாண மாணவிகள்ஸ கல்லூரி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு, வருவதால் கல்லூரி வளாகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருப்பூரில் 17 வயது சிறுமி கர்ப்பம்… தந்தையும் காதலனும் போக்சோவில் கைது – பரபரப்பு சம்பவம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் மற்றும் காரைக்காலில் உள்ள பல்கலைக்கழகத்தின் கிளை ஆகியவற்றில் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு  லேப் டெக்னீசியன்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது