Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாகேந்திரன் சாகவில்லை… பிளாஸ்டிக் சர்ஜரி செய்து காப்பாற்றிய அரசு – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர் குற்றச்சாட்டு

Armstrong Case Twist : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிருடன் இருப்பதாகவும், அவரை தமிழக அரசு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்பவிட்டுள்ளதாகவும் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் நீதிமன்றத்தில் அதிர்ச்சியளிக்க கூடிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

நாகேந்திரன் சாகவில்லை… பிளாஸ்டிக் சர்ஜரி செய்து காப்பாற்றிய அரசு – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர் குற்றச்சாட்டு
நாகேந்திரன் - ஆம்ஸ்ட்ராங்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Nov 2025 20:37 PM IST

சென்னை, நவம்பர் 8 : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (Amstrong) கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிருடன் இருப்பதாகவும், அவரை தமிழக அரசு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்பவிட்டுள்ளதாகவும் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் நீதிமன்றத்தில் (Court) அதிர்ச்சியளிக்க கூடிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 2024 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் நாகேந்திரன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங்க இந்த பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்டிராங் கடந்த ஜூலை 2024 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் சிறையில் இருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிக்க : எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

ஆம்ஸ்டிராங்கின் சகோதரர் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 9, 2025 அன்று உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைந்த அன்று அவர் உடல் முன்னிலையில் அவரது மகனின் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் திடீர் திருப்பமாக மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது ஆம்ஸ்டிராங்கின் சகோதரர் கீனோஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜரானார். அப்போது பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை என்பதற்காகவே, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறையினர் இதுவரை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை. இதன் மூலம் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது என்றார்.

இதையும் படிக்க : ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு

மேலும் பேசிய அவர் பெரும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார். அப்போது பேசிய அவர், முக்கிய குற்றவாளி நாகேந்திரன் இறக்கவில்லை. அரசு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வேறொருவராக மாற்றி உயிருடன் தப்பவிட்டுள்ளது. அவரது மரணம் போலியாக காட்டப்பட்டுள்ளது என்றார். இது நீதிமன்றத்தில் உள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை வருகிற நவம்பர் 10, 2025 அன்று ஒத்திவைத்தார்.