கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த 2 சிறுமிகள்.. பத்திரமாக மீட்ட போலீசார்!
Two Missing Girls Rescued in Kanyakumari | கன்னியாகுமரியில் சுற்றுலா போலீஸ் திட்டத்தின் கீழ் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ரோந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித் திரிந்த இரண்டு சிறுமிகளை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி, நவம்பர் 11 : கன்னியாகுமரி (Kanyakumari) தமிழகத்தின் (Tamil Nadu) முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குமரி மாவட்ட சூப்பிரண்டு ஸ்டாலின் அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுற்றுலா போலீஸ் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் அடிப்படையில், போலீசார் சுற்றுலா பகுதிகளில் ரோந்து வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
ரோந்து பணியின் போது போலீசார் கண்ணில் சிக்கிய இரண்டு சிறுமிகள்
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு இரண்டு சிறுமிகள் தனியாக சுற்றித் திரிந்ததை அவர்கள் கவனித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சிறுமிகளிடம் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அதில் ஒரு சிறுமி 15 வயது உடையவர் என்றும் செப்டம்பர் மாதம் அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வெளியேறியதும் தெரிய வந்துள்ளது. இந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியேறியது தொடர்பாக சென்னை, சிந்தாதரிப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. தீக்குளித்துவிடுவேன் என பெண்ணை மிரட்டிய நபர்!




தெலங்கானாவை சேர்ந்த 18 வயது சிறுமியும் கண்டுபிடிப்பு
அந்த இரண்டு சிறுமிகளில் மற்றொரு சிறுமி தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 18 வயது சிறுமி என்பது தெரிய வந்துள்ளது. அந்த சிறுமியும் தனது வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்துக்கொண்ட போலீசார், இருவரையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ரூ.2 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தி கொலை செய்த நபர்…. சுட்டுப்பிடித்த போலீசார்… ஓசூர் அருகே பரபரப்பு
சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த சிறுமிகளை மீட்ட போலீசார், அவர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் தெலங்கானா பகுதிகளை சேர்ந்த சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு மாவட்ட சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.