AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தினமும் காலையில் வெற்றிலை தண்ணீர்… டாக்டரே வியக்கும் ஆரோக்கிய பலன்

Betel Leaf Water: இரவு முழுவதும் ஊறவைத்த வெற்றிலை தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான செரிமானப் பிரச்சனைகள் முற்றிலும் குணமாகின்றன. வெற்றிலையில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

தினமும் காலையில் வெற்றிலை தண்ணீர்… டாக்டரே வியக்கும் ஆரோக்கிய பலன்
Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 17 Jun 2026 12:51 PM IST

நம் முன்னோர்களின் வாழ்வியலில் வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து தாம்பூலம் தரிக்கும் பழக்கம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. நவீன காலத்தில் இந்த ஆரோக்கியமான பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வரும் சூழலில், வெற்றிலையின் மருத்துவ குணங்கள் தற்போதும் வியக்க வைக்கும் வகையில் உள்ளன. சித்த மருத்துவத்தில் பல மருந்துகளுக்குத் துணையாகப் பயன்படுத்தப்படும் வெற்றிலை, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை சீராக்க வல்லது. குறிப்பாக, இரவு முழுவதும் ஊறவைத்த வெற்றிலை தண்ணீரை காலையில் வடிகட்டி குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் வியக்கத்தக்க ஆரோக்கிய பலன்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

மூளை மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் இயற்கை ஊக்கி

பொதுவாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது நம் மூளைக்கு ஆரோக்கியம் தரும் என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. இது நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து போடுவது இதயத்தையும் வலுப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதய தசைகளின் இயக்கத்தை மேம்படுத்துவதில் வெற்றிலை முக்கியப் பங்கு வகிக்கிறது.

மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான எளிய தீர்வு

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பலரையும் வாட்டி வதைக்கும் மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு வெற்றிலை ஒரு சிறந்த அரணாக விளங்குகிறது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது நீரிழிவு நோய் முதல் முதல் மன அழுத்தம் வரை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், மனதை அமைதிப்படுத்தி பதற்றத்தைக் குறைக்க வழிவகை செய்கிறது.

வயிற்றுப் உபாதைகளைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

வெற்றிலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த இயற்கைச் சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றப் பெரிதும் உதவுகின்றன. இது உடலில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது. செரிமானப் பாதையைச் சுத்தப்படுத்தி, அல்சர் போன்ற வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கவும் இது துணைபுரிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது, உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனளிக்கும் ஒரு சிறந்த நடைமுறையாகும்.

மலச்சிக்கலை வேரறுக்கும் வெற்றிலை தண்ணீரின் மகிமை

செரிமானக் குறைபாட்டினால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு மலச்சிக்கல் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது மலச்சிக்கல் பிரச்சனை வராமல் காக்கும் என்றாலும், இதனை எளிய முறையில் தண்ணீராகவும் பருகலாம். வயிற்றுப் பிரச்சனைகள் வராமல் இருக்க வெற்றிலையை அரைத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் அந்த வெற்றிலை தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் மூலம் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே வராது என்று ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Follow Us