AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உல்லாசத்துக்கு அழைத்த 64 வயது முதியவர்.. மறுப்பு தெரிவித்த பெண்.. அடுத்து நடந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

Cuddalore Woman Murder : கடலூர் மாவட்டத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்த பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்த முதியவரை அண்ணாமலை நகர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

உல்லாசத்துக்கு அழைத்த 64 வயது முதியவர்.. மறுப்பு தெரிவித்த பெண்.. அடுத்து நடந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
கடலூரில் பெண் அடித்து கொலை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Jun 2026 17:46 PM IST

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி காமாட்சி ( 28 வயது). இவருக்கும், இதே ஊரை சேர்ந்த மகேந்திரன் ( 64 வயது) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை சாதகமாக பயன்படுத்திய மகேந்திரன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காமாட்சியை காட்டுமன்னார்கோவிலுக்கு வருமாறு கூறி உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காமாட்சி உன்னை செருப்பால் அடித்து அதை வீடியோவாக எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த வீடியோ காட்சிகளை காமாட்சி வாட்ஸ் ஆப்பில் அனுப்பியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மகேந்திரன் இன்று திங்கள் கிழமை காலை சுமார் 7:00 மணி அளவில் காமாட்சியின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பெண்ணை கட்டையால் தாக்கிய முதியவர்

மேலும், ஆத்திரம் தாங்காமல் காமாட்சியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த காமாட்சி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மேலும், அருகில் இருந்த காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு உள்ளனர். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வருவதை பார்த்த மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர், அங்கு வந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த காமாட்சி மற்றும் பாண்டுரங்கனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சிவகங்கையில் மாணவன் கொலை வழக்கில் திருப்பம் – போக்சோ வழக்காக மாற்றம் – அதிர்ச்சி தகவல்

முதியவர் தாக்கியதில் உயிரிழந்த பெண்

அங்கு, காமாட்சியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது தந்தை பாண்டுரங்கன் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, காமாட்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அண்ணாமலை நகர் போலீசார் காமாட்சியின் கணவர் கார்த்திக்கிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்தனர்.

தலைமறைவான முதியவரை கைது செய்த போலீசார்

தொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மகேந்திரனை போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். கடலூரில் உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்ணை முதியவர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: செஞ்சுரி அடிக்கும் வெயில்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?

Follow Us