AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செஞ்சுரி அடிக்கும் வெயில்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?

Tamil Nadu Weather Update: சென்னையைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருந்தாலும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செஞ்சுரி அடிக்கும் வெயில்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Jun 2026 15:00 PM IST

வானிலை நிலவரம், ஜூன் 8, 2026: தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஜூன் 8ஆம் தேதியான இன்று நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:

அதேபோல், ஜூன் 9ஆம் தேதியைப் பொருத்தவரையில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை இருக்கக்கூடும் என்றும், நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் கோர விபத்து.. அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்.. உயர்நீதிமன்ற அதிகாரி உள்பட இருவர் பலி!

ஜூன் 10ஆம் தேதி நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் தேதி நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:

மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கமும் கடுமையாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 40.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர தமிழகத்திலும் வட தமிழகத்திலும் அனல் காற்று போன்ற வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருந்தாலும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us