என் பெயரோ – படத்தையோ பயன்படுத்த வேண்டாம்.. தனிநபர் அமைப்புகளுக்கு அண்ணாமலை அன்பு கட்டளை!
Annamalai Latest Pressmeet: தமிழகத்தில் எனது பெயரில் செயல்பட்டு வரும் அமைப்புகள் மற்றும் இயக்கங்களில் இனி எனது பெயர் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று அண்ணாமலை அன்பு கட்டளை பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதை பார்க்கலாம்.
தமிழகத்தில் அண்ணாமலை அன்பு கூட்டம் மற்றும் அண்ணாமலை நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் WE THE LEADERS என்ற இயக்கம் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இயக்கம் தொடங்கி 3 நாள்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தில் தன்னார்வத்துடன் இணைந்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் இணைந்து தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நமது இயக்கத்தில் நிரந்தர பதவி இருக்காது
தற்போதைய சூழ்நிலையில் நான் உள்பட அனைவரும் இந்த பெயர் இயக்கத்தின் ஒரு அங்கமாக மட்டுமே உள்ளோம். யாருக்கும் எந்த விதமான பொறுப்புகளோ அல்லது பதவிகளோ வழங்கப்படவில்லை. தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்னதாகவே கூறியது போல, நமது இயக்கத்தில் நிரந்தர பதவி என்பது இருக்காது. ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் வி த லீடர்ஸ் இயக்கம் ஈடுபடும்.
மேலும் படிக்க: ஊருக்குள் புகுந்து தென்னை மரங்களை வேருடன் சாய்த்த யானைகள்.. தென்காசியில் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை!




வி தி லீடர்ஸ் இயக்கத்துக்கு தொடர்பில்லை
இந்த சூழ்நிலையில் சில தன்னார்வலர்கள் இணைந்து எனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சில இயக்கங்களை தொடங்கி இருப்பதாக தகவல் வருகிறது. மேலும், மாவட்ட வாரியாக பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முறையான செயல் முறையில்லை என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது வி தி லீடர்ஸ் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட நமது முயற்சி இதுபோன்ற செயல்பாடுகளால் நிறுத்து போய்விடும்.
எனது பெயர் – புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம்
எனவே, எனது பெயரை பயன்படுத்தி அண்ணாமலை அன்பு கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு எனது பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தோம். ஆனால், தொடர்ந்து சில அமைப்புகள் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது வருத்தத்துக்குரியதாக உள்ளது. எனவே, எந்த அமைப்புகளிலும் எனது பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “ரூ.30,000 கோடி செலவு”.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தம்?.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!!