AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொம்மை, பொம்மை, பொம்மை பார்! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் சாடல்..

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வும், தவெக அமைச்சருமான நிர்மல் குமார் முஷ்டியை மடக்குகிறார். தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக்கொடுக்கிறார் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

பொம்மை, பொம்மை, பொம்மை பார்! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் சாடல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Jun 2026 17:35 PM IST

ஜூன் 8, 2026: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காததைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பொம்மை, பொம்மை, பொம்மை பார்!  ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்!

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வும், தவெக அமைச்சருமான நிர்மல் குமார் முஷ்டியை மடக்குகிறார். தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக்கொடுக்கிறார்.

மேலும் படிக்க: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை.. நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..

தமிழகத்தில் யார் முதல்வர்?

முருக பக்தர்களுக்கு எதிராக தவெகவின் வாலும், காலும் இப்படி சலங்கை கட்டி ஆடிக்கொண்டிருக்க, ‘தலைமை’ என்று கூறிக்கொள்ளும் நீங்கள் இதுகுறித்து இன்னும் ஒரு வார்த்தைக்கூட பேசாதது ஏன் விஜய் அவர்களே? தமிழகத்திற்கு உண்மையில் யார்தான் முதல்வர்?

உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஒரு சாராருக்கு சாதகமாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் உங்கள் அமைச்சர்கள் இப்படி வாய் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவா மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்?

மேலும் படிக்க: பெரம்பூர் சூட்கேஸ் மர்டர்.. டவுசர் – சிகப்பு நிற பையால் சிக்கிய கொடூர மனைவி.. கொலையின் பரபரப்பு பின்னணி!

இந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி:

தேர்தலுக்கு முன்பு அமைதி காத்துவிட்டு, ஆட்சியமைத்தவுடன் முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பதுதான் தவெகவின் மத நல்லிணக்க அரசியலா?

சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்ற திமுகவின் அதே கீழ்த்தரமான எண்ணத்தை பிரதிபலிக்கும் நீங்கள், உண்மையில் தூய சக்தி அல்ல; ஒரு ‘துரோக சக்தி’!” என தெரிவித்துள்ளார்.

Follow Us