AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மனைவியின் ஆசை.. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 மதிப்பிலான பரிசு பொருட்கள்!

5000 Rupees Worth Gifts To Government School Students | திருப்பத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் ஆசையின்படி, அவர் படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5,000 மதிப்புள்ள புத்தக பை பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.

மனைவியின் ஆசை.. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 மதிப்பிலான பரிசு பொருட்கள்!
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய தொழிலதிபர்
Vinoth V
Vinoth V | Updated On: 09 Jun 2026 17:32 PM IST

ஜோலார்பேட்டை, ஜூன் 09 : திருப்பத்தூர் (Tiruppattur) மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த டி.வீரபள்ளி பகுதியில் உள்ள எம்ஐஎஸ்.குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர், திருப்பதி ராவ் ஆயில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது மனைவியின் ஆசைக்கு ஏற்ப, தனது மனைவி படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5,000 மதிப்புள்ள புத்தக பை உள்ளிட்ட பொருட்களை வழங்கி அசத்தியுள்ளார்.

மனைவியின் ஆசையை நிறைவேற்றிய தொழிலதிபர்

திருப்பதி ராவின் மனைவி டி.வீரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றுள்ளார். இந்த நிலையில், தனது மனைவி பயின்ற பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். அதற்காக விழா ஏற்பாடு செய்த அவர், மாணவ மாணவிகளை ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். அதுமட்டுமன்றி, ஒவ்வொரு மாணவ, மாணவியின் தலையிலும் கிரீடம் வைத்து அவர் அழகு பார்த்தார்.

இதையும் படிங்க : மீண்டும் ஒரு லாக்அப் டெத்? போலீஸ் விசாரணைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழப்பு.. எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன!

ரூ.5,000 மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்

மாணவ, மாணவிகளை வரவேற்று முடித்த கையோடு அவர்களுக்கு புத்தகை பை உள்ளிட்ட சுமார் ரூ.5,000 மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கினார். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தக பை, நோட்டு புத்தகங்கள், டிபின் பாக்ஸ், பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்களை அவர் பரிசாக வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முதல்வர் விஜய் – செங்கோட்டையன் சொன்ன தகவல்

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது பரிசுபொருட்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்காக திருப்பதி ராவ் செய்த செயல் அந்த பகுதி மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

Follow Us