AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண் காவலர் ஓட ஓட விரட்டி கூட்டு பலாத்கார முயற்சி.. 100-ஐ அழைத்ததால் தப்பித்தார்.. 3 பேரிடம் அதிரடி விசாரணை!

Sivaganga Female Police Harassment : சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை பெண் காவலரை அவரது ஆண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், தொடர்புடையதாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பெண் காவலர் ஓட ஓட விரட்டி கூட்டு பலாத்கார முயற்சி.. 100-ஐ அழைத்ததால் தப்பித்தார்.. 3 பேரிடம் அதிரடி விசாரணை!
சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Jun 2026 18:34 PM IST

சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படையில் பெண் ஒருவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், தபால் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த பெண் காவலர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பைக்கில் சிவகங்கை அருகே நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த ஆண் நண்பர் தனது நண்பர்கள் இருவரை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அந்த நபர்கள் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், மூன்று பேருந்து சேர்ந்து அந்த பெண் காவலரை திடீரென கூட்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் காவலர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். அவரை, அந்த நபர்கள் பின் தொடர்ந்து துரத்தி வந்தனர். செல்லும் வழியில் அந்த பெண் காவலர் காவல் அவசர உதவி எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண் காவலரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அவரை சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, அந்த பெண் காவலர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை புகாராக தெரிவித்தார். அதன் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், பெண் காவலரை பாலியல் தொந்தரவு செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

பெண் காவருக்கே கூட்டு பாலியல் தொல்லை

அந்த நபர்கள் குறித்த தகவலை போலீஸ் தரப்பில் இருந்து தற்போது வரை வெளியிடவில்லை. சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டம்

இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவருக்கே கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர் – திருப்பத்தூர் அருகே பரபரப்பு

Follow Us