பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
DMK Leader MK Stalin: தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும்பாலான குற்றங்களில் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் ஈடுபடுவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
சென்னையில் திராவிட முன்னேற்ற கழக மகளிர் அணி கூட்டம் இன்று சனிக்கிழமை ( ஜூன் 13) நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் முதல் அமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தமிழக வெற்றி கழகத்திற்கு எதற்காக வாக்களித்தோம் என்றும் மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் போல செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. கான்ஃபிடன்ட்டா இருங்க என்று மக்களிடம் கூறும் விஜய்கே தனது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. இதன் காரணமாகவே பிற கட்சிகளை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திமுக ஆட்சியில் மக்களுக்கு திட்டங்களை பார்த்து பார்த்து செய்தோம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக முதல்வர் விஜய் டெல்லி சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஆளும் அரசின் தவறுகளை திமுக பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்து மக்களிடம் சுட்டிக் காட்டும். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்தோம். ஆனால், தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நாள்தோறும் ஒவ்வொரு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: “இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!




வரும் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக அரசு கவிழும்
இதனால், தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை மக்கள் வாக்களிக்காமல் கவிழ்ப்பார்கள். தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு எதற்காக வாக்களித்தோம் என்று மக்கள் வருந்த தொடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தவெகவைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் தவெகவினர்
பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன என்று மு. க. ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தது. திமுக – தவெக இடையே தான் போட்டி என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “நாங்க மாற்றத்தை கொண்டு வருவோம்-னு சொல்றாங்க”.. இதைவிட என்ன மாற்றம் வேணும்?.. ஆ.ராசா பளீர்!