AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர் – திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திரருப்பத்தூர் மாவட்டம் கோட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ‌ பெருமாள் என்பரின் மகன் இளங்கோ (68) என்பவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு மட்டும் முடித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தார். அப்போது அங்கு சோதனையின் போது ஆங்கில மருந்துகளுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.

பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர் – திருப்பத்தூர் அருகே பரபரப்பு
போலி மருத்துவர் கைது
Vinoth V
Vinoth V | Published: 13 Jun 2026 18:14 PM IST

திருப்பத்தூர், ஜூன் 13 : திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொட்டாவூர்,பேரம்பட்டடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர் .

பிடிபட்டபோது பயத்தில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர்

அப்போது கோட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ‌ பெருமாள் மகன் இளங்கோ (68) என்பவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு மட்டும் முடித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தார். அப்போது அங்கு சோதனையின் போது ஆங்கில மருந்துகளுடன் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த நிலையில் இளங்கோ பிடிபட்டவுடன் பயத்தில் பேண்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ வலையில் கூடுதல் எஸ்.பி.- டி.எஸ்.பி.. அதிரடி விசாரணையால் பரபரப்பு!

இதனை செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும் பொழுது இது கூட வீடியோ எடுப்பீங்களா வீடியோ எடுத்து போடுங்க நான் பிரபலம் ஆகிறேன் என கூறினார் அது மட்டுமல்லாமல் கிருஷ்ணர் எனக்கு தண்டனை கொடுத்து விட்டார். அதனால் இன்று அனுபவிக்கிறேன் எனவும் தத்துவம் பேசினார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் இளங்கோ மருத்துவம் பார்த்து வந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் போலி மருத்துவர் என அறியாமலேயே அவசர காலங்களில்  மக்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தலைநகரம் படத்தில் வடிவேலுவை நினைவுபடுத்துவது போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அதேபோல பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்(36) என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததால் அவருடைய கிளினிக்குக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் உதவியுடன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : விஜய்க்கு அடுத்தடுத்து தலைவலி.. தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் தவெகவினர்.. சேலத்தில் கட்சி நிர்வாகி செய்த அட்டூழியம்!

இந்த சோதனையின் போது மாவட்ட மருந்தக ஆய்வாளர் சுரேஷ்குமார்,அரசு மருந்து ஆளுநர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக் ஆகியோர் இருந்தனர். முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இருவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து இது போல போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

 

Follow Us