சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.. ‘ஏ கிளாஸ்’ சிறை கேட்ட முன்னாள் காவலர்கள்.. குட்டு வைத்த நீதிமன்றம்!
தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்த ஐந்து முன்னாள் காவலர்களும், தங்களுக்கு சிறையில் 'ஏ கிளாஸ்' (முதல் வகுப்பு) சிறை அறை மற்றும் அதற்கான பிரத்யேக வசதிகளை வழங்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். தங்களின் முந்தைய அரசுப் பதவி மற்றும் தகுதியின் அடிப்படையில் இந்த வசதி வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
மதுரை, ஜுன் 13: நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் 5 பேரின் ‘ஏ கிளாஸ்’ (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு காலத்தில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் செல்லத்துரை, சாமதுரை, வெயில்முத்து ஆகிய போலீசார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..
முன்னாள் காவலர்களின் மனு:
தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்த ஐந்து முன்னாள் காவலர்களும், தங்களுக்கு சிறையில் ‘ஏ கிளாஸ்’ (முதல் வகுப்பு) சிறை அறை மற்றும் அதற்கான பிரத்யேக வசதிகளை வழங்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். தங்களின் முந்தைய அரசுப் பதவி மற்றும் தகுதியின் அடிப்படையில் இந்த வசதி வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், முன்னாள் காவலர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. “சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் காவல் அதிகாரிகள் 5 பேருக்கும் சிறையில் ‘ஏ-கிளாஸ்’ (முதல் வகுப்பு) வசதிகளை வழங்க முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறி, அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த கறாரான உத்தரவு சட்ட வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
9 பேருக்கு தூக்குத் தண்டனை:
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், கடந்த ஏப்.26ம் தேதி இந்திய சட்ட வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு லாக்-அப் மரண வழக்கில் மிகக் கடுமையான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். ஒரு காவல் நிலையத்தின் முழு அதிகாரமும் இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பதால், நேரடியாகக் குற்றத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்தராஜ், சாமதுரை, செல்லத்துரை, வேலுமுத்து, தாமஸ், முருகன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.