இன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஆகஸ்ட் 6, 2026 இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 6 : தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஆகஸ்ட் 6, 2026 இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவகிறது.
இதையும் படிக்க : “இபிஎஸ்-ஐ நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும்?”.. அமைச்சர் ஆனந்துடன் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் திடீர் சந்திப்பு!!




இதன் காரணமாக ஆகஸ்ட் 6, 2026 இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தார். தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, விழுப்புரம். கடலூர், சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடகூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7, 2026 நாளை கோயம்புத்தார். தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தார். திருவண்ணாமலை, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “தைரியம் இருந்தால் சட்டப்பேரவையில் பதில் சொல்லுங்கள்!”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!
வெப்பநிலை குறித்த தகவல்
ஆகஸ்ட் 6, 2026 இன்றும் ஆகஸ்ட் 7, 2026 நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வெப்ப நிலை சற்று குறையக்கூடும். மேலும் ஆகஸ்ட் 8, 2026 முதல் ஆகஸ்ட் 10, 2026 2 நாட்கள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை ஆகஸ்ட் 8, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.