AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை கொட்டப்போகும் மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை கொட்டப்போகும் மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Aug 2026 06:25 AM IST

ஆகஸ்ட் 6, 2026: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 38.5 டிகிரி செல்சியஸ், நாகையில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கணிசமான மழையும் பதிவாகி வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவை, தேனி, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மழை நீடிக்கும்:

ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேனி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவை – ஜெயப்பூர் மற்றும் திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – முன்பதிவு எப்போது?

ஆகஸ்ட் 9-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை எப்படி இருக்கும்?

அதேநேரத்தில், அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் மற்றும் புழுக்கம் நீடிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us