AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தறுதலைகளின் வேலையா? தற்குறிகளின் வேலையா? ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு – வீடியோ பகிர்ந்து விமர்சனம்

James Vasanthan : பிரபல இசையமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தறுதலைகளின் வேலையா? தற்குறிகளின் வேலையா என குறிப்பிட்டு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தறுதலைகளின் வேலையா? தற்குறிகளின் வேலையா? ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு – வீடியோ பகிர்ந்து விமர்சனம்
ஜேம்ஸ் வசந்தன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Apr 2026 21:32 PM IST

சுப்ரமணியபுரம், நாணயம், பசங்க உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதலப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது தன் கார் கண்ணாடியை யாரோ சேதப்படுத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகிய நிலையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றபோது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் தவெகவினர் குறித்தும் விஜய் குறித்தும் கடுமையாக விமர்சித்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : ரிசார்ட் வெப் சிரிஸ் நடிகைக்கு மிரட்டல் விடுத்த எரும சாணி விஜயகுமார் – நடந்தது என்ன?

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் ஃபேஸ்புக் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், தமிழ் சமூகத்தையும் இளைய தலைமுறயினரையும் கெடுக்க வந்திருக்கும் கருவியாகவே நான் தமிழக வெற்றிக் கழககத்தை பார்க்கிறேன். இதுவரை தமிழக அரசியல் இதுவரை இவ்வளவு களங்கப்பட்டதில்லை. எம்ஜிஆர், சிவாஜி, இவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார்கள் என சொல்வார்கள். லெஜண்ட் சரவணன் அடிப்பைடயில் ஒரு தொழிலதிபர், அவரிடம் பணம் இருப்பதால் நடிக்கும் ஆசையை தீர்த்துக்கொண்டார்.

இதையும் படிக்க : Mamitha Baiju: கர படத்தில் முதலில் மமிதாவின் வேடத்தில் நடிக்கவிருந்தவர் அந்த நடிகைதான் – இயக்குநர் விக்னேஷ் ராஜா ஓபன் டாக்!

உதயநிதி நடிகர் தான் என்றாலும் 70 ஆண்டு கால கட்சியை சேர்ந்த கருணாநிதியின் பேரன் என்று தான் அறிமுகமானார். அவர் வீட்டில் என்ன மாதிரியான அரசியல் பேச்சு ஓடும் என யோசித்து பாருங்கள். ஆனால் விஜய் வீட்டுக்குள் திரைப்படம் தான் இருக்கும் அரசியல் பேச்சு இருக்காது. அரசியல் அறிவே இல்லாத நடிகர் விஜய் அதற்குள் வந்தது மிகப்பெரிய தவறு. வாக்காளர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்று பேசினார்.

Follow Us