விடுதலை படத்தின் ஷூட்டிங்கிலேயே வெற்றிமாறன் அரசன் படத்தின் கதையை கூறினார் – விஜய் சேதுபதி சொன்ன விசயம்
Actor Vijay Sethupathi Talks About Vetrimaaran: தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் தன்னிடம் எத்தனை கதைகளை கூறினார் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேமியோ வேடத்திலும், வில்லன் கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குநர் வெற்றிமாறனும் முதன்முறையாக கூட்டணி வைத்தது விடுதலை பாகம் ஒன்று படத்தில் தான். இந்தப் படம் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் மூலமாகதான் நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விடுதலை பாகம் இரண்டு படத்தில் விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் கூட்டணி சேர்ந்தது. இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான நிலையில் இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி அளித்தப் பேட்டியில் இயக்குநர் வெற்றிமாறன் குறித்தும் அரசன் படம் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




வெற்றிமாறன் விடுதலை பட ஷூட்டிங்கிலேயே 5-6 கதைகள் சொன்னார்:
அதன்படி விஜய் சேதுபதி கூறியதாவது, நாங்கள் ‘விடுதலை’ படத்தில் பணியாற்றியபோது, வெற்றிமாறன் சார் என்னிடம் 5 முதல் 6 கதைகளை விவரித்தார். அவருடைய யோசனைகள் அனைத்தும் மிக அற்புதமாக இருந்தன. அந்த வகையில், ‘அரசன்’ கதையையும் அவர் என்னிடம் மிகவும் இயல்பாகவும் நட்புரீதியாகவும் விவரித்தார்; அந்தக் கதை எனக்கு ஏற்கனவே தெரியும்.
ஒரு நாள், ‘அரசன்’ படத்தில் நானும் ஒரு அங்கமாக இணைய வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். உண்மையைச் சொல்லப்போனால், அப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னவென்று கூட எனக்குத் தெரியாது. ஏனெனில், அவரை எனக்கு நன்கு தெரியும். மேலும், அவருடன் நான் ஏற்கனவே பணியாற்றியிருக்கிறேன். அவர் என்னை ஏனோதானோவென்று பயன்படுத்தமாட்டார்—கதையின் போக்கிற்குப் பொருத்தமான வகையிலும், நியாயமான முறையிலும் மட்டுமே அவர் என் கதாபாத்திரத்தை அமைப்பார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்றும் தெரிவித்து இருந்தார்.
Also Read… அரசன் மற்றும் வட சென்னை 2 படங்களின் நிலை என்ன? இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் பேச்சு:
#Vetrimaaran sir narrated 5-6 stories when we were doing #Viduthalai..🤝 All his ideas were wonderful.. Even He narrated #Arasan story in a friendly way.. I know the story..
• One day he asked me to be a part of #Arasan.. Honestly , I don’t even know about my role.. Because I… pic.twitter.com/u7azEloHdS
— Laxmi Kanth (@iammoviebuff007) March 15, 2026