AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்.ஜி.ஆர் குறித்து தவறான கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர்… எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால்

Vishal opposed veteran Telugu actor Rajendra Prasad : தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வரும் ராஜேந்திர பிரசாத் தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்து இருந்த நிலையில் அதற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் குறித்து தவறான கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர்… எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால்
விஷால், ராஜேந்திர பிரசாத்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Mar 2026 10:46 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து விஷால் குறித்த செய்திகள் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து நடிகர் விஷால் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமா வட்டாரங்களிலும் வைரலகி வருகின்றது.

அதன்படி சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் கடந்த இல நாட்களுக்கு முன்பு ராவ் நினைவு தேசிய விருது நிகழ்வு நடைப்பெற்றது. இந்த விழாவில் பழம்பெரும் நடிகர் ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர் தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான திரு எம்.ஜி.ஆர் அவர்கள் கூட நடிகர் ராவை பார்த்தால் பயப்படுவார் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமா பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் குறித்து தவறான கருத்து… எதிர்ப்பு தெரிவித்த விஷால்:

அதன்படி நடிகர் விஷால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது, தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ஸ்ரீ ராஜேந்திர பிரசாத்தின் சமீபத்திய கருத்துக்களை சமீபத்தில் ஒரு விழாவில் பார்த்து கேட்கும்போது அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. அன்புள்ள ஐயா, மிகுந்த வணக்கங்களுடனும், அதே நேரத்தில் கனத்த இதயத்துடனும், மறைந்த நமது புகழ்பெற்ற நடிகர் MGR பற்றிய உங்கள் பேச்சைக் கண்டித்து இந்த ட்வீட்டை எழுதுகிறேன்.

அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தவர். மற்றொரு புகழ்பெற்ற நடிகர் ஸ்ரீ காந்த ராவ் அவர்களைப் புகழ்ந்து பேசியது ஒரு அழகான செயலாகும், அதே நேரத்தில் மற்றொரு புகழ்பெற்ற நடிகர் MGR அய்யாவை இன்னும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பது குறித்து உங்கள் பேச்சு நம் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப இல்லை.

இந்த கட்டத்தில் எது அவசியம் மற்றும் மிக முக்கியமானது என்பதை நீங்கள் நன்கு அறிந்த வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினைக்கு நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் எதிர்காலத்தில் உங்கள் அந்தஸ்துள்ள ஒரு நடிகரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், ஒரு நடிகராக நானும் அவ்வாறே செய்வேன். நல்லெண்ணத்துடன், கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read… நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் – வைரலாகும் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு!

நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபல நடிகர்கள்… அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள்

Follow Us