தனது மகன் யாத்ரா ராஜாவை நடிகராக அறிமுகப்படுத்தும் தனுஷ்?
Dhanushs Son Yatra Raja To Debut As Hero: தென்னிந்திய சினிமாவில் உச்சமாக இருந்துவருபவர் தனுஷ். இவர் இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இவர் தனது மூத்த மகனான யாத்ரா ராஜாவை கதாநாயகனாக சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவரின் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தை தனுஷ் இயக்கியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் வரவேற்கப்படாமல் ஓடிடியில் வெளியான பிறகு மக்களிடையே வரவேற்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தனுஷ் மற்றும் அவரின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு (Aishwarya Rajinikanth), யாத்ரா ராஜா (Yathra Raja) மற்றும் லிங்கா (Linga) என இரு மகன்கள் உண்டு.
அதில் மூத்த மகன்தான் யாத்ரா ராஜா. இவர் தனது கல்லூரி படிப்பைத் தொடர்ந்துவரும் நிலையில், இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகபரவிவருகிறது.




இதையும் படிங்க: தடையை மீறிய பிக்பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்… விசாரணையில் வனத்துறையினர்
ஹீரோவாக படத்தில் நடிக்கவுள்ள யாத்ரா ராஜா :
நடிகர் தனுஷின் மூத்தமகனான யாத்ரா, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். இந்த திரைப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்க, தனுஷே இப்படத்தை இயக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
யாத்ரா ராஜா ஹீரோ அறிமுகம் குறித்து வைரலாகும் பதிவு:
As Per VP,
— #Dhanush is set to introduce #YatraRaja as a lead actor. The film will be directed by Dhanush, with #WunderbarFilms producing the project. 🎬✨#Kara pic.twitter.com/YE355e8q2D
— Movie Tamil (@_MovieTamil) January 28, 2026
தனுஷின் புது படங்கள் :
நடிகர் தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் மமிதா பைஜூவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்கப்பட்டிருந்த நிலையில், இதன் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துவருகிறது. இப்படத்தை அடுத்ததாக டி 55, டி 56 என தொடர்ந்து பல படங்ககளை தனது கைவசத்தில் தனுஷ் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகை தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட தேவதை – இயக்குநர் அட்லி
மேலும் அப்துல்கலாம் பயோபிக், இளையராஜா பயோபிக் மேலும் இந்தியில் ஒரு புதிய படம் என தனது கைவசத்தில் பல படங்களை தனுஷ் வைத்துள்ளார். மேலும் இயக்குநராகவும் புது படத்தை இயக்க இவர் காதல் எழுதிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பிகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.