Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவை தொடர்ந்து வெங்கி அட்லூரி அடுத்து இயக்கப் போவது இந்த பிரபல நடிகரா? வைரலாகும் தகவல்

Director Venky Atluri Next Movie Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் தற்போது சூர்யாவின் படத்தில் பிசியாக வேலை செய்து வரும் நிலையில் அடுத்ததாக இவர் எந்த நடிகரை இயக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யாவை தொடர்ந்து வெங்கி அட்லூரி அடுத்து இயக்கப் போவது இந்த பிரபல நடிகரா? வைரலாகும் தகவல்
வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Feb 2026 14:33 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தெலுங்கு சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் படங்களை இயக்கி வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அதன்படி இவரது இயக்கத்தில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படம் லக்கி பாஸ்கர். நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பான் இந்திய அளவில் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவு  நல்ல வரவேறபைப் பெற்றது.

இந்தப் படத்தின் மாபெரும்  வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்து எந்த நடிகரை இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி சூர்யாவின் 46வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் நானியை இயக்கும் வெங்கி அட்லூரி:

இந்த நிலையில் சூர்யா 46 படத்தில் பிசியாக இருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்ததாக பிரபல நடிகர் நானியின் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வெங்கி அட்லூரி மற்றும் நானி கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு இந்த 2026-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தியேட்டரில் மாஸ் காட்டிய தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Kayadu Lohar: என்னிடம் அந்த விஷயத்தை மாற்றவேண்டும் என நினைக்கிறேன் – கயாடு லோஹர்!