Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 46 படம் இப்படிதான் உருவானது… இயக்குநர் வெங்கி அட்லூரி சொன்ன விசயம்

Director Venky Atluri: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 46 படம் இப்படிதான் உருவானது… இயக்குநர் வெங்கி அட்லூரி சொன்ன விசயம்
வெங்கி அட்லூரி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Dec 2025 15:04 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் நிலையில் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று இருந்தாலும் இறுதியாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கர் படம் இவரை பான் இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது. லக்கி பாஸ்கர் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்தது மட்டும் இன்றி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உலக மக்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட தென்னிந்திய மொழி படம் என்ற சாதனையையும் லக்கி பாஸ்கர் படம் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து எந்த நடிகரை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சூர்யாவின் 46-வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். படத்தின் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

சூர்யா 46 படம் இப்படிதான் உருவானது:

சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியதாவது, முதலில் 4 கதைகளை எழுது தொடங்கினேன். அதில் சுயசரிதை, காதல் நகைச்சுவை, காவல்துறை சார்ந்த கதை மற்றும் லம்ஹே படத்தைப் போன்ற ஒரு திரைப்பட கதை ஆகியவை ஆகும். இதில் சூர்யா லம்ஹே போன்ற கதையை தேர்வு செய்தார். அதுதான் சூர்யா 46 படமாக உருவாகி வருகின்றது.

மேலும் இந்தப் படம் எப்படி இருக்கும் என்றால், ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் மரணத்தால் அவளை இழக்கிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவளைப் போலவே தோற்றமளிக்கும் அவளுடைய மகளால் அவன் மீண்டும் காதலிக்கப்படுகிறான் என்பதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கேரளாவில் ஜன நாயகன் படத்தின் FDFS எப்போது தொடங்குகிறது தெரியுமா? வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் வெங்கி அட்லூரி பேச்சு:

Also Read… மம்முட்டியின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கலக்காவல் படம்… ஓடிடி ரிலீஸ் எப்போது?