பெரிய லாடு லபக்குதாஸ்… நல்ல பாம்பே இல்ல… பிக்பாஸில் அரோரா குறித்து தனது அம்மாவிடம் புறணி பேசும் பார்வதி
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் மற்றவர்கள் குறித்து அதிகமாக புறம் பேசும் நபராக இருக்கிறார் பார்வதி. தற்போது நடைபெறும் ஃப்ரீஸ் டாஸ்கில் அவரது அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள போது அவரிடம் போட்டியாளர்கள் குறித்து புறம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனக்கள் மட்டுமே பெற்று வருகின்றது. இந்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு முக்கிய காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பார்வதி இருக்கிறார். இவர் ஒரு இடத்தில் அல்லது ஒரு விசயம் பற்றி பேசினால் அது நிச்சயமாக நியாயமாகவே இருக்காது என்று ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் அளவிற்கு மிகவும் அன் எத்திகலாக பல விசயங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் செய்து வருகிறார் பார்வதி. தான் இந்தப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்பது போல பல விசயங்களை தொடர்ந்து பார்வதி செய்து வருகிறார். இவர் யார் உடன் இருந்தாலும் அந்த மற்ற்பொரு நபரும் ரசிகர்களிடையே நெகட்டிவான விமர்சனத்தைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பார்வதி மற்றொரு போட்டியாளரான கம்ருதின் உடன் காதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக நட்பில் தொடங்கிய இவர்களின் பழக்கம் காதல் வரை சென்றுள்ளது. இவர்கள் தொடர்ந்து மைக் மாட்டாமல் பேசியது குறித்து பல முறை பிக்பாஸ் கண்டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் அரோரா குறித்து தனது அம்மாவிடம் புறணி பேசும் பார்வதி:
இந்த நிலையில் ஃப்ரீஸ் டாஸ்கில் பார்வதியின் அம்மா 24 மணி நேரமும் பிக்பாஸில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர் அரோரா மற்றும் அவரது தோழி ரியா குறித்து தனது அம்மாவிடம் புறணி பேசிகிறார் பார்வதி. அதற்கு ஏற்றார்போல அவரது அம்மாவும் வெளிப்படையாக பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… கர்ப்பிணிகளின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கை… மலையாளத்தில் இந்த ஒண்டர் உமன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day82 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/JetXszZU1t
— Vijay Television (@vijaytelevision) December 26, 2025
Also Read… நீ அந்த விசயத்தில் ஹீரோவா இருக்கனும்… பிக்பாஸில் கம்ருதினுக்கு பார்வதியின் அம்மா கொடுத்த அட்வைஸ்