கர்ப்பிணிகளின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கை… மலையாளத்தில் இந்த ஒண்டர் உமன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Wonder Women Malayalam Movie: மலையாள சினிமாவில் கர்பிணி பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் ஒண்டர் உமன். மிகவும் உணர்வுப்பூர்வமான கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாத 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஒண்டர் உமன். இந்தப் படத்தை இயக்குநர் அஞ்சலி மேனன் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நதியா மொய்து,
நித்யா மேனன், பார்வதி திருவோத்து, பத்மப்ரியா ஜானகிராமன், சயனோரா பிலிப், அர்ச்சனா பத்மினி, அம்ருதா சுபாஷ், ராதா கோமதி, நிலம்பூர் ஆயிஷா, டாக்டர் ஹரீஸ் சலீம், ஸ்ரீகாந்த் கே. விஜயன், பிரவீன் பிரேம்நாத், அஜயன் அடத், சந்தேஷ் குல்கர்னி, ரம்யா சர்வதா தாஸ், பி.வி. ஆகாஷ் மகேஷ், ஜமாலாயிஷா பாவா, விஷக் நாயர், நடூர் பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான RSVP திரைப்படங்கள், ஃப்லையிங் யூனிகார்ன் எண்டெர்டைன்மெண்ட் மற்றும் லிட்டில் ஃபிலிம்ஸ் ஆகியவை சார்பாக தயாரிப்பாளர்கள் ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அஷி துவா சர ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்து இருந்த நிலையில் படம் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
Also Read… ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!




ஒண்டர் உமன் படத்தின் கதை என்ன?
கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்காக சுமானா என்ற இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு நதியா பயிற்சி கொடுப்பவராக இருக்கும் நிலையில் இவரது சுமானாவிற்கு நித்யா மேனன், பார்வதி திருவோத்து, பத்மப்ரியா ஜானகிராமன், சயனோரா பிலிப், அர்ச்சனா பத்மினி, அம்ருதா சுபாஷ் ஆகியோர் வருகின்றனர். இவர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் தற்போது சோனிலிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… சண்டை இல்லாம இருக்கவே மாட்டாங்க போல… பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை