Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியான இந்த கிறிஸ்டி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Christy movie OTT Update: மலையாள சினிமாவில் ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கிறிஸ்டி. இந்த கிறிஸ்டி படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தது வருகின்றது.

ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியான இந்த கிறிஸ்டி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
கிறிஸ்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 22 Dec 2025 23:07 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 17-ம் தேதி பிப்ரவரி மாதம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கிறிஸ்டி. ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் அல்வின் ஹெண்ட்ரி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகர் மேத்யூ தாமஸ் நாயகனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜாய் மேத்யூ,
நீனா குருப், வீணா நாயர், முத்துமணி, சஜய் செபாஸ்டியன், மஞ்சு சுனிச்சன், ஜெய குருப், ராஜேஷ் மாதவன், சாவித்திரி ஸ்ரீதரன்,பென்யமின், அலிஸ்டர் அலெக்ஸ், அர்ஜுன் ஆர்யன், கோகுல் வினு, அகில் அசோக், அக்ஷயா, ராகுல் ரெகு, ஆல்வின் ஹென்றி, ஜி.ஆர். இந்துகோபன், வினீத் விஸ்வம், த்ரிஷ்யா பத்மநாபன், ஊர்மிளா கிருஷ்ணன், அரவிந்த் தீபு, அகில் காவலயூர், ஆர்.ஜே.முருகன், வின்சென்ட் வடக்கன், ஜார்ஜ் கோரா, சைலக்ஸ் அபிராம், கண்ணன் சதீசன், சிபி தாமஸ், நௌஷாத் ஷாகுல், ரஞ்சித் விஜயன் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக்கி மவுண்டன் சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போலவே படல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… நிதி அகர்வாலை தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய சமந்தா ரூத் பிரபு – வைரலாகும் வீடியோ

கிறிஸ்டி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

மேத்யூ தாமஸ் இந்தப் படத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் நபராக இருக்கிறார். ஆனால் இவர் படிப்பில் சரியாக இல்லை என்பதல் இவருடன் வயது மூத்த நடிகை மாளவிகா மோகனனிடம் டியூஷன் சேர்கிறார். அப்போது மாளவிகா மீது மேத்யூ தாமஸிற்கு காதல் ஏற்படுகிறது. அதனை அவர் எப்படி எல்லாமோ அவரிடம் தெரிவிக்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் மாளவிகாவிற்கு மேத்யூ தாமஸின் காதல் தெரிகிறது. தன்னை விட வயது குறைவானவர் என்பதால் அந்த காதலை ஏற்க மறுக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனிலிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பிக்பாஸில் கம்ருதின் – பார்வதி இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ