Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் கம்ருதின் – பார்வதி இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 78 நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 12-வது வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பார்வதி மற்றும் கம்ருதி இடையே இன்று சண்டை நடைபெறும் வீடியோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் கம்ருதின் – பார்வதி இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Dec 2025 10:56 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 78-வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு 2 அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்படும். இந்த டாஸ்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொரு குடும்பமாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு சீசனிலும் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்களும் சரி இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் தொடர்ந்து இந்த டாஸ்கை எதிர்பார்த்து காத்து இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதன்படி இந்த 9-வது சீசனில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற உள்ளது. முன்பு 8 சீசன்களில் இல்லாத சலுகை ஒன்று இந்த 9-வது சீனலில் வழங்கப்பட்டுள்ளது. அந்த சலுகைக்காக பிக்பாஸ் கடந்த 11-வது வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்கை வழங்கினார்.

இந்த டான்ஸ் மாரத்தான் டாஸ்கில் வெற்றிபெறும் அணியில் இருந்து ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் இந்த வாரம் நடைபெறும் ஃப்ரீஸ் டாஸ்கில் 24 மணி நேரமும் பிக்பாஸ் வீட்டில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த சலுகை ஆதிரைக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர் வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய காரணத்தால் அதனை வேறு ஒருவருக்கு ட்ரான்ஸ்வர் செய்யும் வாய்ப்பை ஆதிரைக்கு பிக்பாஸ் வழங்கினார். அப்போது ஆதிரை அதனை பார்வதிக்கு வழங்குவதாக தெரிவித்தார். இதன் காரணமாக பார்வதியின் குடும்பத்தினர் இந்த வாரம் நடைபெறும் ஃப்ரீஸ் டாஸ்கில் 24 மணிநேரம் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் கம்ருதின் – பார்வதி இடையே வெடித்த சண்டை:

இந்த நிலையில் இன்று 78-வது நாளிற்கான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் பார்வதியிடம் கம்ருதின் சண்டையிடுவது காட்டப்படுள்ளது. பார்வதி மீண்டும் தன்னை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது என்று வினோத் மற்றும் அமித்திடம் கோவமாக கம்ருதின் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… படப்பிடிப்பை முடித்தது தனுஷின் D 54 படக்குழு… வைரலாகும் போஸ்ட்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 2026-ம் தமிழ் சினிமாவில் வரிசைக்கட்டும் நடிகை மமிதா பைஜுவின் படங்கள் – லிஸ்ட் இதோ