யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரு பேரே வரலாறு பாடல்
Oru Pere Varalaaru Single: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கிய நிலையில் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளதாக அறிவித்தார். மேலும் நடிகர் விஜய் தான் இறுதியாக நடிக்கும் படம் இது என்றும் இனி படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் இனி நடிகர் விஜய் படங்களில் நடிக்க மாட்டார் என்ற செய்தி அவர்களுக்கு இதயத்தை நொறுக்கும் விச்யமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தங்களுக்கு எவ்வளவு மன வேதனையை ஏற்படுத்தியது என்று வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மன வேதனையில் இருந்தாலும் மறு பக்கம் தொடர்ந்து ஜன நாயகன் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அதன்படி இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரு பேரே வரலாறு பாடல்:
அதன்படி இசையமைப்பாளர் அனிருத் இசையில் முன்னதாக தளபதி கச்சேரி பாடல் முதல் சிங்கிளாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு ஒரு பேரே வரலாறு என்ற பாடலின் சிங்கிள் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#OruPereVaralaaru is trending #1 on @youtubeindia music charts 🔥
▶️ https://t.co/wDTWU49xUu#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @VishalMMishra @Lyricist_Vivek @thedeol… pic.twitter.com/einJ2yh0ZF
— KVN Productions (@KvnProductions) December 20, 2025
Also Read… Arasan: அரசன் படத்தில் இணைந்தாரா ஆண்ட்ரியா? இன்ஸ்டாகிராம் பதிவால் ஹேப்பியில் ரசிகர்கள்!



