Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேரளாவில் ஜன நாயகன் படத்தின் FDFS எப்போது தொடங்குகிறது தெரியுமா? வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie FDFS In Kerala: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் முதல் நாள் முதல் காட்சி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

கேரளாவில் ஜன நாயகன் படத்தின் FDFS எப்போது தொடங்குகிறது தெரியுமா? வைரலாகும் தகவல்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 Dec 2025 20:31 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விஜய் மீதான தங்களின் பாசத்தை காட்டுவதில் போட்டிப் போடுவது மலையாள சினிமா ரசிகர்கள் என்று கூறலாம். நடிகர் விஜயின் படம் தமிழ் சினிமாவில் எவ்வள்வு பெரிய ஓபனிங் இருக்குமோ அதே அளவிற்கு மலையாள சினிமாவிலும் பெரிய அளவிற்கு ஓபனிங் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அது மட்டும் இன்றி மலையாள சினிமாவில் உள்ள பல நடிகர்கள் தொடர்ந்து நடிகர் விஜயின் நடிப்பை பாராட்டுவது மட்டும் இன்றி அவரது நடத்தை புகழாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவில் உள்ள ரசிகர்களிடையே எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறதோ அதே அளவிற்கு மலையாள சினிமா ரசிகர்களிடையேயும் எதிர்பார்பு நிலவி வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கேரளாவில் ஜன நாயகன் படத்தின் FDFS எப்போது தொடங்குகிறது தெரியுமா?

இந்த நிலையில் தமிழகத்தில் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு முன்னதாக தற்போது வெளியிடுவது இல்லை. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் 9 மணிக்கு முன்பு காட்சிகள் இருக்காது என்பதால் அண்டை மாநிலத்தில் உள்ள திரையரங்குகளுக்கு தமிழக மக்கள் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் ஜன நாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் காலை 4 மணிக்கு ஜன நாயகன் படத்தின் காட்சி ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்… உறுதி செய்த வில்லன் நடிகர்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த பாடலைப் பாடியது உங்கள் தளபதி விஜய்… ஜன நாயகன் படத்தின் 3-வது சிங்கிள் குறித்த அப்டேட் இதோ