ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்… உறுதி செய்த வில்லன் நடிகர்
Jailer 2 Movie Update: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது விருவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் நிலையில் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடி வருவது நடிகர் ரஜினிகாந்தை தான். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி வருடத்திற்கு ஒரு படமாவது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்து இருந்த நிலையில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த உடனே வெளியீட்டிற்கு முன்னதாகவே அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதால வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்சியாக இந்த இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.




ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்:
இந்த நிலையில் முதல் பாகத்தில் பான் இந்திய மொழி நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தது போல இந்த இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிப்பது முன்னதாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பதை வில்லன் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜிவி பிரகாஷின் இம்மார்ட்டல் படத்தின் டீசரை வெளியிட்ட ரவி மோகன் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 – #ShahRukhKhan is said to be a part of the film..😮🔥 Confirmed by the Antagonist of the film Mithun chakraborty..🤝 Biggest Ever Casting from #NelsonDilipkumar..💥 Hope he uses them properly like Part 1..✌️
Superstar #Rajinikanth, Shahrukh Khan, Mohanlal,…
— Laxmi Kanth (@iammoviebuff007) December 25, 2025
Also Read… ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது தாய் கிழவி படத்தின் டீசர்